தலைமை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

ஏகலைவா' மாதிரி உண்டி
உறைவிடப்பள்ளி, தலைமை ஆசிரியர் பணியிடத்திற்கு, ஆக., 20க்குள் விண்ணப்பிக்க வேண்டும்
மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டில், பழங்குடியினர் நலத்துறையின் கீழ், ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட பள்ளிகள் செயல்படுகின்றன
விழுப்புரம், நீலகிரி, திருவண்ணாமலை, வேலுார், நாமக்கல் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இயங்கி வரும், ஏகலைவா மேல்நிலைப் பள்ளிகளில், தலைமை ஆசிரியர் பணியிடங்கள், காலியாக உள்ளன. இப்பணியில் சேர, சி.பி.எஸ்.இ.,யின் கீழ் பணியாற்றி ஓய்வு பெற்ற, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் மேல்நிலை பள்ளிகளில் பணிபுரிந்து, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பங்களை, ஆக., 20க்குள், 'இயக்குனர், பழங்குடியினர் நல இயக்குனரகம், சேப்பாக்கம், சென்னை - 5' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்

Share this

0 Comment to "தலைமை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...