கோவை மாவட்டத்தில் துவக்க பள்ளி, நடுநிலை, உயர்நிலை,
மேல்நிலைப்பள்ளிகளில் சத்துணவு திட்டம் நடைமுறையில் உள்ளது. 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ. மாணவிகள் சத்துணவு திட்டத்தில் பயன்பெற்று வருகின்றனர். சத்துணவு கூடங்களில் தயாரிக்கப்படும் உணவுகளில் சுவை, தரம் குறைவாக இருப்பதாக மதிய உணவு திட்ட துறை, மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பருப்பு சாம்பாரில் பருப்பு அளவு குறைக்கப்பட்டு தண்ணீர் அளவு அதிகரிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.சத்துணவு திட்டத்தில் உள்ள பல மாணவ மாணவிகள், சத்துணவு சாப்பிட மறுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சத்துணவு திட்டத்தில் தயாரிக்கப்படும் உணவுகளை தரம் பார்த்து அறிய தனி ஆசிரியர் குழு ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் தினமும் வழங்கப்படும் அரிசி சாதம், முட்டை, காய்கறி, பருப்புகளின் தரம் அறிந்து அந்த விவரங்களை குறிப்புகளாக எழுதி வைக்கவேண்டும்.
இதற்காக அனைத்து அரசு பள்ளிகளில் சுவை பதிவேடு பராமரிக்கப்படவேண்டும். இந்த பதிவேடுகளில் பதிவான தகவல்கள் அடிப்படையில் கல்வி அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்யவேண்டும். மாணவ மாணவிகளின் கருத்துக்களை பெற்று தரம் குறைவாக உணவு தயாரிக்கப்பட்டிருப்பதாக தெரியவந்தால் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சத்துணவு திட்டத்துறை உத்தரவிட்டுள்ளது. மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (மதிய உணவு) மூலமாக பள்ளிகளில் உணவு தயாரிப்பு பணிகளை ஆய்வு செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.'
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...