இந்தியாவில் வாட்ஸ்அப் செயலி இப்படித் தான் இயங்க வேண்டும் - மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்
மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தை, வாட்ஸ் ஆப் நிறுவனத்தின் சி.இ.ஓ. கிறிஸ் டேனியல்ஸ் டெல்லியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
சமூக விரோதிகளால் வாட்ஸ் ஆப்பில் பரப்பப்படும் வதந்தியால் ஏற்படும் கும்பல் வன்முறை குறித்து மத்திய அரசு கவலை தெரிவித்து இருந்தது. வதந்தி பரப்பப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு வாட்ஸ் ஆப் நிறுவனத்தைக் கேட்டுக் கொண்டிருந்தது நினைவிருக்கலாம்..
இந்த நிலையில், வாட்ஸ் ஆப் சி.இ.ஓ. கிறிஸ் டேனியல்ஸ் இந்தியா வருகை புரிந்துள்ளார். அவர் இன்று டெல்லியில் மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தை சந்தித்து, வாட்ஸ் ஆப்பில் வதந்தி பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுப்பது குறித்தும், இந்தியாவில் வாட்ஸ் ஆப் பேமெண்ட் சேவையை தொடங்குவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

Share this