இன்ஸ்டகிராம் பேமென்ட்: பயன்படுத்துவது எப்படி?
சமூகவலைதளங்களில் முக்கியத் தளமான இன்ஸ்டகிராம், அடிக்கடி புதுப்புது அப்டேட்களை அறிமுகப்படுத்தி பயனர்களைக் கவர்ந்து வருகிறது. அந்த வகையில், கடந்த சில வாரங்களில் வெளியான அப்டேட்டில் yes/no வாக்குகள், எமோஜிகள், story soundtrack உள்ளிட்ட பல வசதிகளை அறிமுகம் செய்திருந்தது.

இந்நிலையில் இன்ஸ்டகிராமிலிருந்து நேரடியாக ஷாப்பிங் செய்யும் வசதி தற்போது சோதனை செய்யப்பட்டுவருவதாகவும், விரைவில் பயனர்களுக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளதாகவும் சமீபத்தில் அந்நிறுவனம் அறிவித்திருந்தது. தற்போது இன்ஸ்டகிராமில் பேமென்ட் வசதியை எளிதில் அணுகும் முறை குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.
முதலில் செய்யவேண்டியது:
இன்ஸ்டகிராம் பேமன்ட் சேவையைப் பயன்படுத்த 57.0.0.9 என்ற புதிய வெர்சனை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.
ஒருவேளை அந்த புதிய வெர்சன் தானாக பதிவிறக்கம் ஆகவில்லையெனில் கூகுள் ப்ளே ஸ்டோர் சென்று அதில் உள்ள அப்டேட் ஆப்ஷனில் புதிய வெர்ஷனை இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும்.
பேமென்ட் வசதியைப் பயன்படுத்தும் முறை:
ஹோம் ஸ்க்ரீனில் உள்ள இன்ஸ்டகிராம் செயலியை ஒப்பன் செய்து, ஸ்க்ரீனின் வலதுபுறம் உள்ள ஐகானை கிளிக் செய்து கொள்ளவேண்டும்.
‘Settings’ சென்று, அதில் ‘Payments’ ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். பிறகு profile section-ல் கிரெடிட் அல்லது டெபிட் கார்ட் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்து கார்டு விவரங்களை அளிக்க வேண்டும்.
பின்னர் நாம் அளித்த விவரங்களைப் பாதுகாப்பதற்காக ‘Security TAB'ல் உள்ள ‘Pin’ ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...