NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

WhatsApp Vacation Mode - Next Update?





வாட்ஸ் அப்பின் அடுத்த அப்டேட்டுகள்... மூன்று புதிய வசதிகள் வாட்ஸ் அப்பில் சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செய்தி பரிமாற்றத்தில் சிறந்து விளங்கும் செயலியாக வாட்ஸ் அப் உள்ளது. உலக அளவில் 1.3 பில்லியனுக்கும் அதிகமான மக்களும், இந்தியாவில் 250 மில்லியன் மக்களும் வாட்ஸ் அப் பயன்படுத்துகின்றனர். பேஸ்புக் நிறுவனத்தைச் சேர்ந்த வாட்ஸ் அப் அடிக்கடி அப்டேட் செய்து புதுப்புது வசதிகளை வழங்கி வருகிறது. மேலும் பயனாளர்களின் தேவைக்கு ஏற்ப பல்வேறு புதிய வசதிகள் அவ்வப்போது அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வாட்ஸ் அப்பின் அடுத்த அப்டேட்டுகள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த வகையில் வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்கை இணைப்பதற்கான பணிகள் நடைப்பெற்று வருகின்றன. இதற்காக SETTINGS பகுதியில் மாற்றம் கொண்டு வரப்பட்டு பயனாளரின் அனுமதி கேட்டு அவர்களின் வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் இணைக்கப்படும்.
VACATION மற்றும் SILENT MODE
ஒரு CHATTING பட்டியலில் ஒரு குறிப்பிட்ட சேட்டிங்கை விரும்பவில்லை எனில் VACATION MODEஐ பயன்படுத்தி கொள்ளலாம். அதே போல SILENT MODE இல் MUTE செய்த குரூப்களில் வரும் செய்திகள் உங்கள் கவனத்திற்கு வராம‌ல் தானாகவே நீக்கப்பட்டு விடும். இந்த வசதிகளும் வாட்ஸ் அப்பில் சேர்க்கப்படுகின்றன. இந்த VACATION MODE வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு இந்த வசதிகள் பெரும் உதவியாக இருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive