NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கொரோனா பாதிப்பு - தமிழக மாவட்டங்களை மூன்று வண்ணங்களாக பிரித்து அரசு பட்டியல்!

IMG_20200411_204628

தமிழகத்தில் இன்று 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 969 ஆக அதிகரித்துள்ளது, உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

இன்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்த, தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம், ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக பிரதமர் மோடி எடுக்கும் முடிவை தமிழக அரசு அமல்படுத்துவது என்று அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்பாக விளக்கமளித்த அவர், இன்று புதிதாக 58 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறினார். இதனால், பாதிப்பு எண்ணிக்கை 969ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை மாவட்ட வாரியாக பாதிப்பு எண்ணிக்கை சாதாரணமாக வெளியிடப்பட்ட நிலையில், தற்போது மூன்று வண்ணங்களாக பிரித்து பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சிவப்பு, ஆரஞ்ச், மஞ்சள் ஆகிய மூன்று நிறங்கள் பயன்படுதப்பட்டுள்ளன.

கொரோனா பாதிப்பின் தீவிரத்தை உணர்த்த இந்த வண்ணங்களுக்குள் மாவட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி, சென்னை, கோவை, ஈரோடு, நெல்லை, திண்டுக்கல், நாமக்கல், செங்கல்பட்டு, தேனி, திருச்சி, ராணிபேட்டை, திருவள்ளூர், திருப்பூர், மதுரை, தூத்துக்குடி, நாகை, கரூர், விழுப்புரம் ஆகிய 17 மாவடங்கள் சிவப்பு வண்ணத்தில் அதாவது அதிக பாதிக்கப்பட்ட பகுதிகளாக குறிக்கப்பட்டுள்ளன.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive