ஆசிரியர்கள்
தங்களது கற்பிக்கும் திறனை மேம்படுத்தவும் , கற்றல் மற்றும் கற்பித்தலில்
புதிய அணுகுமுறைகளை தெரிந்து கொள்ளும் வகையிலும் ஒவ்வொரு ஆண் டும் அனைத்து
அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு
பணியிடைப்பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ,
நடப்பாண்டில் 1 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை கையாளும் அரசு பள்ளி
ஆசிரியர்க ளுக்குமத்திய அரசின்மனிதவள மேம்பாட்டு துறையின் சார்பில் மாநில
கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் மூலம் நிஷ்டா எனும் ஒருங்கி ணைந்த
பயிற்சி முகாம் நேற்று ( 16 ம் தேதி ) முதல் நடைபெற இருந்தது.
இதற்காக , ஒவ்வொரு பள்ளியிலும் 5 பாட ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு , பெயர் பட்டியல் மாவட்ட கல்வித்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. பயிற்சி தொடங்க இருந்த நிலையில் நிஷ்டா பயிற்சி முகாம் திடீரென ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் மற்றும் மீண்டும் எப்போது பயிற்சி நடைபெறும் என்பது குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...