++ தீபாவளியன்று பட்டாசு வெடிக்க நேரம் என்ன? ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::
பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
தீபாவளியன்று பட்டாசு வெடிக்க நேரம் என்ன?

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தீபாவளி அன்று காலை, மாலை என, இரண்டு மணி நேரம் மட்டும், உள்ளாட்சி அமைப்புகளின் வழிகாட்டுதல்களை பின்பற்றி, பட்டாசு வெடிக்க வேண்டும்' என, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: பட்டாசுகள் வெடிப்பதால், நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்ட வாழ்வாதாரங்கள் பெருமளவில் மாசுபடுகின்றன.

 பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மாசால், குழந்தைகள், முதியவர்கள், நாள்பட்ட நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர்.

பட்டாசுகள் வெடிப்பதால், காற்றின் தரம் பாதிக்கப்படுவது குறித்து, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

மேலும், தீபாவளி பண்டிகை அன்று, காலை, 6:00 முதல், 7:00 மணி வரை; இரவு, 7:00 முதல், 8:00 மணி வரை என, இரண்டு மணி நேரம் மட்டுமே, திறந்தவெளி பகுதிகளில், பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

பொதுமக்கள், சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை, அரசு அனுமதித்த நேரத்தில் கூட்டாக வெடித்து, மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

கடைப்பிடிக்க வேண்டியவை

* குறைந்த ஒலி மற்றும் குறைந்த அளவில் மாசுபடுத்தும் தன்மை உள்ள பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்

* மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், திறந்தவெளியில் ஒன்று கூடி, கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு, அந்தந்த பகுதியில் உள்ள நல சங்கங்கள் வாயிலாக முயற்சிக்கலாம்

* அதி ஒலி எழுப்பும், தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடிகளை தவிர்க்கலாம்

* மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில், பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும் குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில், பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...