++ 3 வயது சிறுவன் "India Book Of Record-ல்" இடத்தைப் பிடித்து சாதனை ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::

Subam Matrimony

சுபம் - இலவச திருமண தகவல் மையம்

https://www.subammatrimony.com/

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அடுத்துள்ள புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மபாலன் என்பவர். அவருக்கு முத்துலட்சுமி எனும் மனைவியும் அகரன் (10), ஆதவன் (3) என 2 மகன்கள் உள்ளனர். அவரின் மகன் ஆதவன் இந்தியாவின் 36 மாநிலங்களின் தலைநகரங்களின் பெயர்களை 48 வினாடிகளில் கூறினார்.

அது மட்டுமின்றி 53 உலக நாடுகளின் தலைநகரங்கள், இந்தியாவின் 7 தேசிய சின்னங்கள், தமிழ் எழுத்துக்களின் எண்ணிக்கை, 12ஆங்கில மாதங்கள், 16 வகை செல்வங்கள் ஆகியவற்றை சரளமாக கூறுகிறான். ஆதவன் "ஜெட்லி புக் ரெக்கார்டில்" ஏற்கனவே சாதனை புரிந்து இடம் பெற்றுள்ளார்.

இப்போது "இந்தியா புக் ஆப் ரெக்கார்டிலும்" இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

இதனையடுத்து ஆதவனின் பெற்றோர்கள் மாவட்ட சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய்யை நேரில் சந்தித்தனர். ஆதவனின் கின்னஸ் சாதனைக்கான சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை அவரிடம் காட்டினர். இதைப்பார்த்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாதனை படைத்த ஆதவனை பாராட்டினார். கொரோனா ஊரடங்கு காலங்களில் வீட்டில் முடங்கிக் கிடக்காமல் அவற்றை பயனுள்ளதாக மாற்றும் வகையில் ஆதவனுக்கு அனைத்தையும் கற்றுக் கொடுத்ததாக அவனது தாய் முத்துலட்சுமி தெரிவித்தார்.

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...