Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

திறந்தநிலைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஜனவரியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.


Screenshot_2020_1230_155250
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத் தில் படித்த மாணவர்களுக்கு தமிழகத்தில் எட்டு மண்டலங்க ளிலும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும் என துணைவேத் தர் கே.பார்த்தசாரதி தெரிவித்துள்ளார் . தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக சென்னை மண்டல மையம் மற்றும் உறுப்பு சமுதாயக்கல்லூரியின் கீழ் செயல்பட்டு வரும் படிப்பு மைய ஒருங்கிணைப்பாளர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது . இந்தநிகழ்ச்சிக்குதுணைவேந்தர் கே.பார்த்தசாரதி தலைமை வகித்து சென்னை மண்டல மையத்தின் கையேட்டை வெளி யிட்டுப் பேசியது : தமிழகத்தில் தற்போது 91 அரசு கலை அறி வியல் கல்லூரிகள் கற்றல் வள மையங்கள் மற்றும் தேர்வு மையங்களாக செயல்பட தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன . அரசு கலை , அறிவியல் கல்லூரிகளில் இடம் கிடைக்காத மாணவர்கள் இப்போது அதே கல்லூரி மூலமாக தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்க முகத்தில் சேரலாம் . அவர்களுக்கான வகுப்புகள் அதே கல்லூ ரியில் நடத்தப்படும் . கற்றல் மையங்களில் தற்போது வரை சுமார் 8,000 - க்கு மேற் பட்ட மாணவர்கள் சேர்ந்துள்ளனர் . இந்த ஆண்டு 10 , 000 மாணவர்கள் சேருவார்கள் என எதிர்பார்க்கிறோம் . திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் சேரும் மாணவர்களின் விவரங் களை பல்கலைக்கழக மானியக் குழுவின் இணையதளத்தில் ஆதார் எண்ணுடன் பதிவேற்றம் செய்ய வேண்டியுள்ளது . எனவே , டிசம்பர் இறுதி வரை மாணவர் சேர்க்கை முடிந்த பின் னர் , அவர்களுடைய விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படும் . கடந்தாண்டு தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத் தில் படித்த மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடத் தப்பட்டது . 

 

இதனால் 1,000 - க்கு மேற்பட்ட இளைஞர்கள் வேலை வாய்ப்பை பெற்றனர் . கரோனா தொற்று தற்பொழுது குறைந்து வருவதால் அரசின் வழிகாட்டுதல்களைப் பெற்று ஜனவரி மாதம் எட்டு மண்டலங்களிலும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும் . இதன் மூலம் அதிகமான இளைஞர்கள் வேலை வாய்ப்பை பெறுவர் . திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு கரோனா பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக இணையவழி யில் தேர்வு நடத்தப்படுகிறது . தற்பொழுதும் மாணவர்களுக்கு இணையவழியில் தேர்வு நடைபெற்று வருகின்றன . அரசு வழி காட்டுதலின் அடிப்படையில் அடுத்த ஆண்டு தேர்வு எவ் வாறு நடத்தப்படும் என்பது குறித்து அறிவிக்கப்படும் என் றார் . இந்த நிகழ்ச்சியில் கல்லூரிக் கல்வி இயக்கக சென்னை மண்டல இயக்குநர் ஆர்.இராவணன் , திறந்தநிலைப் பல்க லைக்கழக ஆட்சிமன்ற உறுப்பினர் என்.தனலட்சுமி , சமுதா யக் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் இரா.பிரகதீஸ்வரி உள்ளிட் டோர் கலந்து கொண்டனர் .





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive