++ பொதுத் தேர்வு தேதிகள் எப்போது அறிவிக்கப்படும் ? - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம். ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::

Subam Matrimony

சுபம் - இலவச திருமண தகவல் மையம்

https://www.subammatrimony.com/

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
senkottaian

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான வெளியான பின்பே 10,11,12ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.ஈரோடு மாவட்டம் கோபி அருகேயுள்ள அரசூரில் மினி கிளினிக் திறப்பு விழா கலெக்டர் கதிரவன் தலைமையில் நடந்தது. இதை பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்  இன்று திறந்து வைத்தார். பின்னர் சத்தியமங்கலத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதைத் தொடர்ந்து நிரூபர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்தார். 


அப்போது பேசிய அவர், மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு காரணமாக அரசு பள்ளி மாணவர்கள் 405 பேருக்கு மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர். 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை 10 சதவீதமாக உயர்த்த பலரும் கோரிக்கை வைத்துள்ளனர். முதல்கட்டமாக 7.5 சதவீதம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் பிறகு 10 சதவீதமாக உயர்த்துவது குறித்து முதலமைச்சர் தான் பரிசீலிக்க வேண்டும். தேசிய இளைஞர் தின திறனாய்வு போட்டியில் தமிழ் மொழி புறக்கணிக்கப்படவில்லை.

தமிழகத்தில் திறனாய்வு தேர்வு வினா தமிழ், ஆங்கிலத்தில் தான் கேட்கப்பட வேண்டும் என்று அனைத்து துறை அதிகாரிகளுக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான பிறகு பொதுத் தேர்வு நடத்துவது குறித்து முதல்வருடன் கலந்து ஆலோசிக்கப்படும். முதல்வருடன் கலந்து ஆலோசித்து பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வு எப்போது நடத்துவது என அட்டவணை குறித்த முடிவு எடுக்கப்படும். தடை நீக்கப்பட்டு மலைப்பகுதியில் பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,என்றார். இதனிடையே வரும் 6, 7ம் தேதி முதலமைச்சர் ஈரோடு மாவட்டம் வருகை தர உள்ளார். அப்போது பல்வேறு வளர்ச்சி பணிகளை தொடங்கி வைக்க உள்ளார்.

1 comment:

Dear Reader,

Enter Your Comments Here...