தமிழகத்தில் , 2020-2021ஆம் நிதியாண்டில் , 15 வயதுக்கு மேற்பட்ட , முற்றிலும் எழுத மற்றும் படிக்கத் தெரியாத 3.10 இலட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவை வழங்கிடும் நோக்கில் கற்போம் எழுதுவோம் இயக்கம் , ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் 60:40 என்கிற நிதிப்பங்களிப்பின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டமானது , ஜீலை -2021 வரை ஒன்றிய அரசால் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
கற்போம் எழுதுவோம் இயக்கத்தின் கீழ் எழுத்தறிவு மையங்களில் சேர்ந்து பயின்று வருகின்ற கற்போர்கள் அனைவருக்கும் குறைந்த பட்ச கற்றல் அடைவுகளின் அடிப்படையிலான மதிப்பீட்டு முகாமை வருகின்ற 29.07.2021 முதல் 31.07.2021 வரை நடத்திடத் திட்டமிடப்பட்டுள்ளது. இம்மதிப்பீட்டு முகாமை பின் வரும் வழிகாட்டு நெறிமுறைகளின் படி சிறப்பாக நடத்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...