தமிழக கல்வித்துறையில் பள்ளி துணை
ஆய்வாளர் ( டி.ஐ. , க்கள் ) பதவியில் சீனியர் பட்டதாரி ஆசிரியர்களை
நியமிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் மாவட்ட
கல்வி அலுவலகங்களில் ( டி.இ.ஓ. , க்கள் ) பட்ட தாரி ஆசிரியர் அந்தஸ்தில்
டி.இ. , க்கள் நியமிக்கப்பட் டுள்ளனர். இவர்கள் அரசு மற்றும் உதவிபெறும் 6 ,
7 , 8 ம் வகுப்பு ஆசிரியரின் கற்பித்தல் திறன் , பள்ளி ஆண்டாய்வு ,
சேர்க்கை நீக்கப்பதிவேடுகள் ஆய்வு , ஆசிரியரின் கல்விச் சான்றிதழ்களின்
உண்மை தன்மை உள்ளிட்ட ஆய்வுகளில் ஈடுபடுவர்.
இப்பதவிகளில் உயர்நிலை தலைமையாசிரியர் பதவி உயர்வு பேனலில் உள்ள சீனியர் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க வேண் டும். ஆனால் தற்போது 90 சதவீதம் டி.ஐ. , க்கள் ஜூனியர் ஆசிரியராக உள்ளனர்.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில் , " அ.தி. மு.க. , ஆட்சியில் அரசியல் பின்னணியில் பலர் இப்பதவிகளை கைப்பற்றி உள்ளனர்.
ஜூனியர்
நிலையில் உள்ளவர்களால் சீனியர் ஆசிரியர்கள் திறனை ஆய்வு செய்வதில் பல
மாவட்டங்களில் ' ஈகோ ' சர்ச்சை எழுகிறது. இதை தவிர்க்க தகுதியுள்ள சீனி
யர்களை இப்பதவியில் நியமிக்க கமிஷனர் நந்தகுமார் நடவடிக்கை எடுக்க வேண்டும்
” என்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...