அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஜூலை 31-ம் தேதி வரை நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறும் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
அனைத்து அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டில் (2026-27) முதலாம் ஆண்டு மற்றும் நேரடி 2-ம் ஆண்டு (லேட்ரல் என்ட்ரி) மற்றும் பகுதி நேர டிப்ளமா படிப்புக்கான நேரடி மாணவர் சேர்க்கை ஜூலை 31 வரை நடைபெறும் என தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் பி.ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
நேரடி சேர்க்கை அறிவிக்கப்பட்டிருப்பதால் தகுதியுடைய மாணவர்கள் சம்பந்தப்பட்ட அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு தேவையான கல்விச் சான்றிதழ்களுடன் சென்று உடனடி சேர்க்கை பெறலாம். இதற்கென தனியாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை.








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...