![]() |
| புரட்சியாளர் சேகுவேரா |
இயல் : அரசியல்
அதிகாரம்:51.தெரிந்து தெளிதல்
குறள் எண்:507
குறள்:
காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாந் தரும்.
பொருள்:
அறியவேண்டியவற்றை அறியாதவர்களை அவர்கள் மீதுள்ள அன்பு காரணமாகப் பதவியில் அமர்த்துவது அறியாமை பலவற்றையும் தரும்.
Strike the iron while it is hot.
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்.
இரண்டொழுக்க பண்புகள் :.
1.பெற்றோர் எனக்கு நன்மை நடப்பதையே விரும்புவர். எனவே அவர்களின் சொல் கேட்டு நடப்பேன்.
2.பெரியவர்கள் தமது அனுபவத்தையே அறிவுரையாக தருவார்கள் என்வே பெரியோர்களின் அறிவுரையை கேட்டு நடப்பேன்.
பொன்மொழி :
தவறுகள்: "தவறுகள் ஏற்படுவது சகஜம். ஆனால் அதைத் திருத்திக்கொள்ளாமல் இருப்பது பெரும் தவறு!"
Thought for the Day :
Mistakes: "Freedom is not worth having if it does not include the freedom to make mistakes."
பொது அறிவு :
1. 2026 செப்டம்பர் 4 அன்று இஸ்ரோ ஏவிய ஏவுகணை எது?
EOS -05.
2. உலக அஞ்சல் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
அக்டோபர் 9.
English words :
1. Nebulous – formless and unclear – உருவமற்ற
2. Enigmatic – mysterious, hard to explain – மர்மமான
புவியியலும் சுற்றுசூழலும் :
ஒரு பேரூராட்சி பல வார்டுகளாக பிரிக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு வார்டிலிருந்தும் மக்கள் ஒரு கவுன்சிலரை நேரடியாகத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
NMMS :
MAT
.கொடுக்கப்பட்டுள்ள படத்தில் உள்ள முக்கோணங்களின் எண்ணிக்கை
(1) 8.
(2) 10.
(3) 12.
(4) 14.
விடை: (3) 12
அக்டோபர் 9
சே குவேரா அவர்களின் நினைவுநாள்
சே குவேரா (Che Guevara) என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா (Ernesto Guevara de la Serna) (14 சூன் 1928 – 9 அக்டோபர் 1967) அர்ஜென்டீனாவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்குபெற்ற போராளி எனப்பல முகங்களைக் கொண்டவர்.
உலக அஞ்சல் தினம்
உலக அஞ்சல் தினம் (World Post Day) அக்டோபர் 9 இல் சர்வதேச ரீதியில் நினைவு கொள்ளப்படுகிறது. அக்டோபர் 9, 1874இல் சுவிட்சர்லாந்திலுள்ள பேர்ன் நகரில் சர்வதேச அஞ்சல் ஒன்றியம் நிறுவப்பட்ட தினமே சர்வதேச அஞ்சல் தினமாகக் கொள்ளப்படுகிறது. மொத்தம் 150 மேற்பட்ட நாடுகளில் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 1969 ஆம் ஆண்டு ஜப்பான் டோக்கியோவில் நடந்த அனைத்துலக அஞ்சல் ஒன்றிய கூட்டத்தில் இந்த தினம் குறித்து முடிவெடுத்து கடைபிடிக்கப்படுகிறது.
நீதிக்கதை
முதலிடம் அல்ல, சிறந்த முயற்சியே முக்கியம்
ஒரு பள்ளியில் அகில் மற்றும் விக்னே ஷ் என்ற இரு நண்பர்கள் படித்து வந்தனர். இருவரும் படிப்பில் ஆர்வமுள்ளவர்கள். ஆனால் அகிலுக்கு எப்போதும் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற வேண்டும் என்ற ஆசை அதிகமாக இருந்தது.
ஒருநாள் பள்ளியில் ஓவியப் போட்டி அறிவிக்கப்பட்டது. அகில், “இந்தப் போட்டியில் நான் தான் முதல் பரிசு வாங்க வே ண்டும்!” என்று நினைத்தான். அவசரமாக ஓவியத்தை வரைந்து முடித்தான். விக்னேஷ் முதல் பரிசைப் பற்றி சிந்திக்காமல், தனக்குத் தெரிந்த சிறந்த முறையில் அழகாகவும் பொறுமையாகவும் ஓவியம் வரைந்தான். ஒவ்வொரு சிறிய விஷயத்தை யும் கவனமாகச் செ ய்தான். போட்டி முடிந்ததும் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அகிலுக்கு இரண்டாம் பரிசும், விக்னேஷுக்கு முதல் பரிசும் கிடைத்தது.
அகில் சற்று வருத்தப்பட்டான். அப்போது ஆசிரியர் அவனிடம்,
“அகில், முதல் இடம் கிடை ப்பது மகிழ்ச்சியான விஷயம். ஆனால் ஒவ்வொரு முறையும் முதல் இடத்தில் இருப்பதுதான் வெற்றி அல்ல. நேற்றை விட இன்று சிறப்பாகச் செய்வதும், உன்னால் முடிந்ததை முழு முயற்சியுடன் செய்வதுமே உண்மையான வெற்றி.” அகில் ஆசிரியரின் வார்த்தைகளைப் புரிந்துகொண்டான். அதன் பிறகு மற்றவர்களை முந்த வேண்டும் என்று நினைக்காமல், தனது திறமையை நாளுக்கு நாள் வளர்த்துக்கொள்ளத் தொடங்கினான்.
சில மாதங்களுக்குப் பிறகு நடைபெற்ற மற்றொரு ஓவியப் போட்டியில் அகில் முதல் பரிசு பெற்றான். ஆனால் இந்த முறை அவன் மகிழ்ந்தது பரிசுக்காக மட்டுமல்ல; தான் முன்பை விடச் சிறப்பாகச் செய்ததற்காகவும்.
🌟 நீதி:
முதலில் வருவது மட்டுமே வெற்றி அல்ல; நம்மால் முடிந்ததைச் சிறப்பாகச் செய்வதே உண்மையான வெற்றி.
இன்றைய செய்திகள்









How to download this as a pdf
ReplyDelete