Padasalai Guides - Public Exam Question Bank

Padasalai Guides - Public Exam Question Bank
Padasalai Guides Previous Year Public Exams Questions Collection

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

லட்சக்கணக்கான மரங்களை சட்டவிரோதமாக வெட்டி சாய்த்த Google

லட்சக்கணக்கான மரங்களை சட்டவிரோதமாக வெட்டி சாய்த்த Google

 காடுகள் அழிப்பு


* பின்லாந்தில் AI DATA CENTER அமைக்க உரிய சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல், 2.5 லட்சம் மரங்களை வெட்டி சாய்த்த GOOGLE நிறுவனம்


* முஹோஸ், கஜானி ஆகிய பகுதிகளில் 1,309 ஏக்கர் பரப்பளவில் இருந்த காடுகள் அழிப்பு; கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்த பின்லாந்து அரசு உத்தரவிட்டுள்ள சூழலில், Google இதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளது.

பின்லாந்து Finland நாட்டில் செயற்கை நுண்ணறிவு (AI) தரவு மையம் (Data Center) அமைப்பதற்காக அனுமதியின்றி லட்சக்கணக்கான மரங்களை கூகுள் நிறுவனம் வெட்டி சாய்த்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


* எங்கு, எவ்வளவு மரங்கள் வெட்டப்பட்டன: 

பின்லாந்தின் முஹோஸ் (Muhos) மற்றும் ஒடான்மாகி / கஜானி (Otanmäki / Kajaani) ஆகிய பகுதிகளில் செயற்கை நுண்ணறிவு தரவு மையம் கட்டும் பணிக்காக சுமார் 2,50,000 முதல் 4,000,000 மரங்கள் வரை (சுமார் 330 முதல் 500 ஹெக்டேர் பரப்பளவிலான காடுகள்) வெட்டி அகற்றப்பட்டுள்ளன.


* சட்டச்சிக்கல் என்ன: முறையான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (Environmental Impact Assessment) முடிக்கப்படுவதற்கு முன்பே கூகுளின் துணை நிறுவனமான Tuike Finland Oy இந்த நிலப்பரப்பை அழித்துள்ளது.


*  அதிகாரிகளின் நடவடிக்கை: 

உரிய அனுமதி பெறாமல் காடுகளை அழித்ததாலும், மேல்மண் அகற்றப்பட்டதாலும் அந்தப் பகுதிகளில் மேற்கொண்டு வந்த அனைத்துப் பணிகளையும் உடனடியாக நிறுத்துமாறு பின்லாந்து நாட்டின் உரிமம் மற்றும் கண்காணிப்பு அதிகாரி (LVV) உத்தரவிட்டுள்ளார். மேலும் இதுகுறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.


* கூகுள் தரப்பு விளக்கம்: 

தற்போதைய வனச் சட்டங்களின்படியே தாங்கள் செயல்பட்டதாக ஆரம்பத்தில் கூறிய கூகுள், பின்னர் தாங்கள் எதிர்பார்த்த தரநிலைகளில் தவறிவிட்டதாக மன்னிப்பு கோரியுள்ளதுடன், சுமார் 130 ஹெக்டேர் பரப்பளவில் மீண்டும் மரங்களை நடும் திட்டத்தை அறிவித்துள்ளது.






0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

80 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

80 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive