Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கல்வி உரிமைச் சட்டத்தை கேள்விக்குறியாக்கும் மசோதா! எம். மார்க் நெல்சன்

            மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள குழந்தைத் தொழிலாளர் சட்டத் திருத்த மசோதா, கல்வி உரிமைச் சட்டத்தையே கேள்விக்குறியாக்கிவிடும் என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர். இதனால், குழந்தைகளின் வளர்ச்சியும், கல்வியும் பாதிக்கப்படுவதோடு பழைய நிலைக்கே அவர்கள் தள்ளப்படும் நிலை ஏற்படும் என்றும் தெரிவித்தனர்.

யுபிஎஸ்சி தேர்வுகளில் மாற்றம் இல்லை: மத்திய அரசு

            யுபிஎஸ்சி தேர்வுகளில் இந்த ஆண்டு மாற்றம் இருக்காது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு நேற்று அதிகார பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அதே நேரம் யுபிஎஸ்சி தேர்வு முறை குறித்து ஆராய நிபுணர் குழு அமைக்கப்படும் என்றும், அக்குழு யுபிஎஸ்சி தேர்வு முறை, தேர்வு எழுதுவோரின் தகுதி, அதற்கான பாடதிட்டம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

உதவி பேராசிரியர் பணிக்கான ‘நெட்’ தகுதி தேர்வு முடிவு வெளியாகாததால் குழப்பம்

          உதவி பேரா சி ரி யர் பணிக் காக கடந்த டிசம் பர் மாதம் நடத் தப் பட்ட ‘நெட்’ தகு தித் தேர்வு முடிவு இது வரை வெளி யா கா த தால் குழப் பம் நீடிக் கி றது. அடுத்த மாதம் நடக் கும் தேர் வுக்கு விண் ணப் பிக்க நாளை (15ம் தேதி) கடைசி நாளா கும்.
 

பிளஸ் 2 அறிவியல், வணிகவியலில் மாநகராட்சிப் பள்ளி மாணவர்களின் மதிப்பெண் குறைந்தது ஏன்? தலைமை ஆசிரியர்களிடம் ஆய்வு

        பிளஸ் 2 தேர்வில், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் அறிவியல் குரூப், வணிகவியல் பாடத்தில் மதிப்பெண் குறைந்த தற்கான காரணங்களை மாநகராட்சி கல்வித் துறை ஆராய்ந்து வரு கிறது. 

+2 பொதுத்தேர்வு தற்காலிக மதிப்பெண் சான்றிதழுடன் மாற்றுச்சன்றிதளையும் வழங்க வேண்டும் - அரசுத்தேர்வுகள் இயக்குனர்

        +2 பொதுத்தேர்வு தற்காலிக மதிப்பெண் சான்றிதழுடன் மாற்றுச்சான்றிதழையும் வழங்க வேண்டும். அதில்  மாணவர்களுக்கு வழங்கும் பிரதியில் மதிப்பெண் சான்றிதழ் வரிசை எண்  என்ற இடத்தில் REFER ORGINAL CERTIFICATE என எழுத வேண்டுமென  அரசுத்தேர்வுகள் இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.

தவறு, தவிர்க்க மாணவர்களுக்கு ஒரே மதிப்பெண்,டி.சி.,

         சில தவறு, குளறுபடி தவிர்த்து பிளஸ் 2 முடித்தவர்களுக்கு ஒரே மதிப்பெண் பட்டியல் வழங்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

பிளஸ் 2 விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி: இதுவரை 80 ஆயிரம் பேர் விண்ணப்பம்

           பிளஸ் 2 விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வியாழக்கிழமையுடன் முடிவடைய உள்ள நிலையில், 80 ஆயிரத்துக்கு அதிகமானோர் விண்ணப்பத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

பிளஸ் 2 துணைத்தேர்வு பதிவு துவக்கம்

            பிளஸ் 2 தேர்வில், 78,722 பேர் தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி பெறாதோர் மற்றும் தேர்வுக்குப் பதிவு செய்து, பல காரணங்களால் தேர்வில் பங்கேற்காதவர்களுக்கான சிறப்பு துணைத்தேர்வு, ஜூன் இறுதி வாரத்தில் நடக்க உள்ளது. 
 

சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவு எப்போது?

            மத்திய பாட திட்ட வாரியமான சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவு வரும், 29ம் தேதிக்குள் வெளியாகும் என, தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தாண்டு மார்ச், ஏப்ரலில் நடந்த, சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான, முடிவுகள், முறையே, வரும் 19ம் தேதியும், 29ம் தேதியும் வெளியிட,  சி.பி.எஸ்.இ., அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். விடைத்தாள் திருத்தம் மற்றும் மதிப்பெண் பட்டியல் தயாரிப்பு பணிகள் முடிந்தால், அதற்கு முன்பே கூட வெளியிடப்படலாம்.

'மாணவர் சேர்க்கைக்கு கட்டுப்பாடு தேவை'-தமிழ்நாடு அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை

          தனியார் மெட்ரிக் பள்ளிகளின் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையில், கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும் என, தமிழ்நாடு அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்ஜி., கல்லூரிகளில் ஐ.டி., இடங்கள் குறைப்பு: பல இடங்களில் எம்.சி.ஏ., பாடப்பிரிவு ரத்து

          தமிழகத்தில், அண்ணா பல்கலைக்குட்பட்ட பல பொறியியல் கல்லூரிகளில், ஐ.டி., படிப்புகள் குறைக்கப்பட்டுள்ளன. சில கல்லூரிகளில் எம்.சி.ஏ., - எம்.டெக்., படிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு: இன்று முதல் விண்ணப்பம் விநியோகம்

           தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வியாழக்கிழமை (மே 14) முதல் விநியோகிக்கப்பட உள்ளன. மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் ஜூன் 4-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும்.

பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியல்: பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

           தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை இணையதளத்தில் வெளியிடக் கோரும் மனுவைப் பரிசீலிக்க அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளருக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
 

பெரியார் மணியம்மை பல்கலை.யில் ஒருங்கிணைந்த பி.எஸ்ஸி., பி.எட். படிப்பு

         தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் நான்கு ஆண்டு கால ஒருங்கிணைந்த பி.எஸ்ஸி., பி.எட். பட்டப்படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
 

இலவச கட்டாயக் கல்வி: 25 சதவீத இடங்களை முழுமையாக நிரப்பக் கோரி மனு: மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

          இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள 25 சதவீத இடங்களில் ஏழை மாணவர்கள் அனுமதிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

டி.இ.ஓ., தேர்வு முடிவு வெளியீடு

          மாவட்டக் கல்வி அதிகாரி - டி.இ.ஓ., பதவிக்கான முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன; மெயின் தேர்வு, ஆக., 6ம் தேதி முதல், மூன்று நாட்கள் நடக்கிறது. கல்வித் துறையில், டி.இ.ஓ., பதவியில், 11 காலி இடங்களை நிரப்ப, 2014 ஜூன் 8ம் தேதி, முதல்நிலை எழுத்துத்தேர்வை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்தியது. இதில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்
.

உலகின் சக்தி வாய்ந்த மருந்து தயாரிப்பாளர் பட்டியலில் 2-ம் இடம் பிடித்த இந்தியப் பெண்

உலகின் சக்தி வாய்ந்த மருந்து தயாரிப்பாளர் பட்டியலில் 2-ம் இடம் பிடித்த இந்தியப் பெண்    இங்கிலாந்தைச் சேர்ந்த பத்திரிக்கை ஒன்று மருந்து தயாரிப்பு துறையில் உலகின் சக்தி வாய்ந்த 100 நபர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த கிரண் மஜூம்தார் ஷா 2-ம் இடத்தைப் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் இடம் பெற்ற ஒரே இந்தியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

அரசு பள்ளிகளில் தேர்ச்சி குறைவது... : காரணம் புரியாமல் பெற்றோர் அதிர்ச்சி

   அனுபவமிக்க ஆசிரியர்கள், கட்டமைப்புகள்இருந்தும், பிளஸ் 2 தேர்வில் அரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் குறைந்து வருவது பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் பழமையான மாவட்டங்களில் ஒன்றான கடலூர், கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. 
 

தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு முறை கண்துடைப்பு! பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் அலட்சியம்

     தனியார் பள்ளிகளில் ஏழை, எளிய மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு, அதிகாரிகள் ஆர்வமின்மையால் கேள்விக்குறியாகி வருகிறது.

CSAT தாள், தகுதித் தாளாக மாற்றம்: புதிய முறை நடப்பாண்டு முதல் அமல்

  சிவில் சர்வீசஸ் முதற்கட்ட தேர்வில் CSAT தாள் தகுதித் தாளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பிளஸ் 1, பிளஸ் 2 படித்தவர்கள் உதவித்தொகையுடன் ஜப்பானில் படிக்கலாம்: தூதரகம் அறிவிப்பு

   ஜப்பானில் படிக்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கு அந்நாட்டு அரசு  கல்வி உதவித்தொகை அறிவித்துள்ளது.

பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும் உயர்கல்வி பெற வசதியற்ற மாணவ, மாணவி-உதவ நினைப்போர் உதவிக்கரம் நீட்டலாம்

    பிளஸ் 2 தேர்வில் 1,100 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று சாதனை படைத்த மாணவ, மாணவி உயர் கல்வி பயில வசதியின்றி தவித்து வருகின்றனர். இவர்கள் குழந்தை தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்டவர்கள்.
திருத்தங்கல் சிறப்புப் பள்ளி மாணவி சி.முத்துச்செல்வி கணக்கு பதிவியல் பாடத்தில் 200-க்கு 200, வணிகவியலில் 199, பொருளியலில் 194, கணினி அறிவியலில் 183, தமிழில் 194, ஆங்கிலத்தில் 165 என மொத்தம் 1,135 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் சாதனை படைத்துள்ளார்.
 

தனியார் நர்சரி பள்ளி மோகத்தால் மூடப்படும் அபாயத்தில் அங்கன்வாடி மையங்கள்

     பெற்றோர்களின் நர்சரி பள்ளி மோகத்தாலும், அரசின் அக்கறையின்மையாலும் தமிழகத்தில் அங்கன்வாடி மையங்கள் தொடர்ந்து மூடப்பட்டு வருகின்றன.
 

TNOU ‌பி.எ‌ட். படி‌‌ப்புக‌ளி‌‌ல் சே‌ர்வத‌ற்கான ‌வி‌ண்ண‌‌ப்ப‌ங்க‌ள் ஜூ‌ன் 9ஆ‌ம் தே‌தி முத‌ல் வழ‌ங்க‌ப்படு‌ம்

            த‌மி‌ழ்நாடு ‌திற‌ந்த‌நிலை ப‌ல்ககலை‌க்கழக‌த்‌தி‌ல் (TNOU) ‌பி.எ‌ட். படி‌‌ப்புக‌ளி‌‌ல் சே‌ர்வத‌ற்கான ‌வி‌ண்ண‌‌ப்ப‌ங்க‌ள் ஜூ‌ன் 9ஆ‌ம் தே‌தி முத‌ல் வழ‌ங்க‌ப்படு‌ம் எ‌ன்று அ‌றி‌வி‌‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள ATM card தேவையில்லை

     உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள ATM card தேவையில்லை. கட்டணம் இல்லாமல் இலவசமாக உங்கள் மொபைல் மூலம் எங்கே இருந்தாலும் தெரிந்து கொள்ளலாம்.

சென்னை டி.பி.ஐ., வளாகத்தில் பாடப்புத்தகம் மீண்டும் விற்பனை

        பெற்றோர்களின் தொடர் கோரிக்கைகளுக்கு பின், சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில், பாடப்புத்தகம் விற்பனை செய்யும் கவுன்டர் மீண்டும் திறக்கப்பட்டு, புத்தகங்கள் விற்பனைக்கு வந்துள்ளன.

பள்ளிக்கூடம் திறக்கும் ஜூன் 1–ந் தேதி 67 லட்சம் மாணவர்களுக்கு விலை இல்லா பாடப்புத்தகம் வழங்க ஏற்பாடு

         பள்ளிக்கூடங்கள் ஜூன் 1–ந் தேதி திறக்கப்படுகின்றன. அன்று அனைத்து அரசு பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 67 லட்சம் மாணவ–மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள், அட்லஸ் ஆகியவை விலை இல்லாமல் வழங்கப்பட உள்ளன என்று பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்தார்.

ஊதியம் வழங்கக் கோரி மாற்றுத் திறனாளி ஆசிரியை சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் மனு

        சிவகங்கை அருகே அரசுப் பள்ளியில் பணிபுரியும் மாற்றுத் திறனாளி ஆசிரியை தனக்கு சம்பளம் வழங்க உத்தரவிடுமாறு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செந்திவேல்முருகனிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்துள்ளார்.
 

சென்னை ஐ.சி.டி. இணை உறுப்பினராக கலசலிங்கம் பல்கலை. தேர்வு

         சென்னையில் உள்ள அகில இந்திய தகவல் மற்றும் தொடர்பு பயிற்சி கழகத்தின்(ஐ.சி.டி) இணை உறுப்பினராக விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகம் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான நினைவுக் கேடயம் மற்றும் சான்றிதழ் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
 

1.50 லட்சத்தை தாண்டியது பி.இ. விண்ணப்ப விநியோகம்

     பொறியியல் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளரக் கலந்தாய்வு விண்ணப்பங்கள் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி வரை ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 199 விநியோகமாகியுள்ளன.

 

அரசு பள்ளி கழிப்பறைகளுக்கு பிறந்தது விடிவு: உள்ளாட்சிகளிடம் பராமரிப்பு பணி

          அரசுப் பள்ளிகளின் கழிப்பறை பராமரிப்பு பணிகளை, உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைத்து, அரசு உத்தரவிட்டு உள்ளது. அரசுப் பள்ளிகளில், போதுமான கழிப்பறை வசதியில்லை. இருக்கும் பள்ளிகளிலும், முறையான பராமரிப்பு இல்லாததால், சுகாதாரக்கேடு ஏற்பட்டு, மாணவர்கள் அவதிப்படுகின்றனர். 
 

பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் பட்டியல் நாளை வழங்க ஏற்பாடு

         பிளஸ் 2 தேர்வில், தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் பட்டியல் நாளை வழங்கப்படுகிறது. இதன் அடிப்படையில் மாணவர்கள் உயர் கல்விக்கு விண்ணப்பிக்கலாம். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 7ம் தேதி வெளியானது. இந்த தேர்வில் 8 லட்சத்து 39 ஆயிரம் பேர் எழுதி தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்கள் உயர்கல்வியில் சேர்வதற்கு வசதியாக தற்காலிக மதிப்பெண் சான்றுகள் வழங்கப்படும்.
 

முதுநிலை பல் மருத்துவப் படிப்பில் மாணவியை அனுமதிக்க உத்தரவு

          முதுநிலை பல் மருத்துவப் படிப்பில் (எம்.டி.எஸ்.) தலித் வகுப்பைச் சேர்ந்த மாணவியை அனுமதிக்குமாறு, புதுச்சேரி மகாத்மா காந்தி முதுநிலை பல் மருத்துவ அறிவியல் நிறுவனத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டது. இதுதொடர்பாக டாக்டர் பி.பிரியகார்டியா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: 

தேர்ச்சி விகிதம் குறைவு: தலைமையாசிரியர்களுடன் மேயர் ஆலோசனை

         பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாநகராட்சிப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் குறைந்தது குறித்து தலைமையாசிரியர்களுடன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தப்பட்டது. பிளஸ் 2 பொதுத் தேர்வில் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட 3 சதவீதம் குறைந்தது. இதனால் மாநகராட்சி கல்வித் துறை மீது குறை கூறப்பட்டு வந்தது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive