Half Yearly Exam 2025
Latest Updates
Public Exam Question Bank For Sale
பிளாஸ்டிக் டப்பாவில் உணவு சாப்பிட்டால் வழுக்கைத்தலை நிச்சயம்: பகீர் தகவல்
எவர்சில்வர் பாத்திரங்களைவிட கழுவுவதற்கு
எளிதாக உள்ளது என பல குடும்பத்தலைவிகள் தங்களது பிள்ளைகளுக்கும்,
கணவர்களுக்கும் பிளாஸ்டிக் டப்பாக்களில் உணவுகளை கட்டித்
தந்தனுப்புகின்றனர். இதில் உள்ள மிகப்பெரிய ஆபத்து பற்றி சமீபத்திய ஆய்வின்
முடிவு எச்சரித்துள்ளது.
மாணவர்கள் வங்கிக்கணக்கு துவக்குவதில் தாமதம்
தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வில், தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு வங்கிக்கணக்கு துவக்கி, அதற்கான விபரங்களை, ஆன்லைனில் பதிவு செய்வதில், பள்ளி தலைமை ஆசிரியர்கள் தாமதம் செய்து வருகின்றனர்.
படிக்கட்டில் தொங்கும்மாணவர்களுக்கு 'அட்வைஸ்'
'பஸ் படிக்கட்டில் தொங்கும் மாணவர்களை
கண்டறிந்து, அவர்களுக்கு பள்ளி பிரார்த்தனை கூட்டத்தில், அறிவுரை வழங்க
வேண்டும்' என, தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர்
உத்தரவிட்டுள்ளார்.
எண்பது சதவீத பள்ளிகளில் கழிப்பறை வசதி கிடையாது: மாணவர் அமைப்பு கவலை
தமிழகத்தில் எண்பது சதவீத பள்ளிகளில்
கழிப்பறை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை தேவை' என, திண்டுக்கல்
கருத்தரங்கில் 'இந்திய மாணவர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் மாரியப்பன்
பேசினார்.
இந்தியாவிலேயே சுத்தமான நகரங்களின் பட்டியல் மத்திய அரசு வெளியீடு; 2-ம் இடம் பிடித்தது திருச்சி
கழிவுகளை திறம்பட மறுசுழற்சி செய்வதன் அடிப்படையில் மத்திய அரசு சுவச்
பாரத் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் 31 மாநிலங்கள்
மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 476 முதல் தர நகரங்களில் சுகாதார
பணிகள் எந்த அளவிற்கு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதை அடிப்படையாக கொண்டு
இந்த சர்வே நடத்தப்பட்டது.
மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் பொன் மொழிகள்
மக்களின்
ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் பொன் மொழிகள்
1.
வெற்றி குறித்த நமது பார்வை
திண்ணமாய் இருந்தால் தோல்வி நம்மை பாதிக்கவே பாதிக்காது
2.
வித்தியாசமாய் யோசிக்க பழகுங்கள் . யாரும் பயனிக்காத பாதையில் பயனிக்க தைரியத்தை வளர்த்துக் கொள்ளுங்கள் . பிரச்சனைகளை வெற்றிக்கொள்ளுங்கள் .
'TET' தேர்வு பிரச்னை : ஆக.18ல் இறுதி விசாரணை
ஆசிரியர் நியமனத்துக்கான 'டெட்' தேர்வில் 5
சதவீத மதிப்பெண் தளர்வு அளித்த அரசாணையை மதுரை உயர் நீதிமன்ற கிளை ரத்து
செய்ததை எதிர்த்து ஓராண்டுக்குப் பின் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு
மேல்முறையீடு செய்து உள்ளது.ஆசிரியர் பணி நியமனத்துக்கான டெட் தேர்வு 2013
ஆகஸ்டில் நடந்தது; 4.5 லட்சம் பேர் எழுதினர். இதில் தேர்ச்சி பெற மொத்த
மதிப்பெண்ணான 150க்கு 60 சதவீதமான 90 மதிப்பெண் பெற வேண்டும். அதன்படி 16
ஆயிரத்து 492 பேர் 90 மதிப்பெண் பெற்றனர்.
தேவை ஒளிவுமறைவற்ற 'கவுன்சிலிங்'
விருதுநகர்:இந்தாண்டு அரசு பள்ளி ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் ஒளிவுமறைவற்ற முறையில் நடக்க வேண்டும் என ஆசிரியர் சங்கத்தினர் எதிர்பார்க்கின்றனர்.
செல்போனில் இணையதள சேவையை பெறவும், துண்டிக்கவும் புதிய வசதி: டிராய் நடவடிக்கை
கூடுதல் வருவாய் பெறும் நோக்கத்தில், செல்போனில் இணையதள சேவையை ‘டிஆக்டிவேட்’ (துண்டித்தல்) செய்யும் நடைமுறையை செல்போன் சேவை நிறுவனங்கள் சிக்கலானதாக வைத்திருப்பதாக புகார்கள் எழுந்து வருகின்றன.
புதுச்சேரி அறிவியல் மைய கோளரங்கம் மீண்டும் மக்கள் பார்வைக்கு திறப்பு
புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள அறிவியல் மையம், கோளரங்கில் பராமரிப்பு
பணிகள் முடிவடைந்து இன்று மீண்டும் மக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டது.
ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு இன்று துவக்கம்
பள்ளி ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு, இன்று
துவங்குகிறது. ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் இடமாறுதல் கலந்தாய்வு, மே
மாதம் நடக்கும். இந்த ஆண்டு, மூன்று மாதங்கள் தாமதமாக, பல சர்ச்சைகளுக்கு
மத்தியில், இன்று துவங்குகிறது.முதற்கட்டமாக, இன்று காலை, உதவி தொடக்கக்
கல்வி அலுவலர்களான ஏ.இ.இ.ஓ., பொது மாறுதல் கலந்தாய்வு நடக்கிறது.
ஆசிரிய பயிற்றுனர்களுக்கு மனமொத்த மாறுதல்
வட்டார வளமையங்களில் காலிப்பணியிடங்கள்
இல்லாததால் ஆசிரிய பயிற்றுனர்களுக்கு மனமொத்த மாறுதல் மட்டும் நடத்த
அனைவருக்கும் கல்வி இயக்கம் முடிவு செய்துள்ளது.
ஏ.டி.எம்., கார்டில் ஆன்--லைன் மோசடி அரசு ஊழியர்களை குறி வைக்கும் கும்பல்
ஏ.டி.எம்.,கார்டு காலாவதி
ஆகிவிட்டது,கார்டின் பின்புறம் உள்ள 'சி.வி.வி.' எண்ணை கூறுங்கள் என கேட்டு
விட்டு, அதன் பிறகு போனில் வரும் 'ஓ.டி.பி.' எனப்படும் ஒன் டைம்
பாஸ்வேர்டை கேட்டு ஆன்-லைனில் பொருட்களை வாங்கும் கும்பல் அரசு ஊழியர்களை
குறிவைத்துள்ளது.
ஒருங்கிணைந்த பட்டதாரி பணித் தேர்வு: ஆகஸ்ட் 9, 16 தேதிகளில் நடைபெறும்; யு.பி.எஸ்.சி. அறிவிப்பு
ஒருங்கிணைந்த
பட்டதாரி பணித் தேர்வுக்கான தேர்வு (நிலை 1) ஆகஸ்ட் 9, 16 ஆகிய தேதிகளில்
நடைபெறும் என, மத்திய பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
கலை ஆசிரியர் தேர்வு ரத்து :டி.ஆர்.பி., புது முடிவு
அரசு பள்ளிகளில், 762 கலை ஆசிரியர்
பணியிடங்களை நிரப்ப, இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட அறிவிப்பை,
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., திடீரென ரத்து
செய்துள்ளது;
TNPSC:குரூப் - 1 தேர்வுக்கு, விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
துணை கலெக்டர், டி.எஸ்.பி., உள்ளிட்ட நான்கு
பதவிகளில் 74 காலி இடங்களுக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய
குரூப் - 1 தேர்வுக்கு, விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்.
கல்லூரி கல்வி இயக்குனர் திடீர் நீக்கம்:உயர்கல்வி துறையில் தொடரும் சர்ச்சை
தமிழக கல்லுாரி கல்வி இயக்குனர் கூடுதல்
பொறுப்பில் இருந்து, செய்யாறு கல்லுாரி முதல்வர் தேவதாஸ், திடீரென
நீக்கப்பட்டு உள்ளார். அதே நேரத்தில், புதிய இயக்குனரையும், கூடுதல்
பொறுப்பிலேயே நியமித்துள்ளதற்கு, கல்லுாரி ஆசிரியர்கள் ஆட்சேபம்
தெரிவித்துள்ளனர்.தமிழக கல்லுாரி கல்வி இயக்குனர், தமிழகம் முழுவதும் உள்ள, 700 கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளை நிர்வகிக்கும் பொறுப்பு உடையவர்.
3 தமிழக பல்கலைக்கு அங்கீகாரம் ரத்து
விதிகளை மீறி செயல்பட்டதாக, தமிழகத்தில்,
அண்ணாமலைப் பல்கலை, தமிழ்நாடு திறந்தவெளிப் பல்கலை உட்பட, நாடு முழுவதும்,
31 பல்கலைகளின் அங்கீகாரத்தை, மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இதனால், இந்த
ஆண்டு மாணவர் சேர்க்கை நடத்துவதில் சிக்கல்ஏற்பட்டுள்ளது.அஞ்சல்
வழியில், தொலை நிலை பட்டப்படிப்புகளை நடத்தும் பல்கலைகளை, இதுவரை தொலை
நிலை கல்வி கவுன்சில் கண்காணித்து வந்தது. இதில் பல புகார்கள் வந்ததால்,
இந்த கவுன்சில் கலைக்கப்பட்டு, யு.ஜி.சி.,யின் நேரடி கட்டுப்பாட்டில் தொலை
நிலை கல்வி அமைப்பு உருவாக்கப்பட்டது.
TNTET: தமிழக அரசு மேல்முறையீடு!
ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டை ரத்து செய்ததை எதிர்த்து
மேல்முறையீடுஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 5%
மதிப்பெண் தளர்வு அளிக்கப்பட்டது. இதை எதிர்த்து மதுரை உயர் நீதிமன்ற
கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டத்தில் தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்து
நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
புதுச்சேரியில் அரசு பள்ளி ஆசிரியருக்கு 6 ஆயுள் தண்டனை
புதுச்சேரி,
அரசு பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஆசிரியர்
ரவீந்தர குமார் என்பவர் மீது தொடரப்பட்ட வழக்கில், அவருக்கு 6 ஆயுள்
தண்டனை, 3 பத்தாண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் என ஏகோபோகமாக
அனுபவிக்க வேண்டும் என நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
ஆய்வக உதவியாளர் தேர்வு வழக்கு - உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை.
எழுத்துத் தேர்வை கருத்தில் கொள்ளாமல் ஆய்வக உதவியாளர் பணியிடங்களை
நிரப்பஎடுக்கப்பட்ட முடிவுக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை
விதித்துள்ளது.
"CRC" பயிற்சி வகுப்புகளில் தன்னார்வலர்கள் கட்டாயம் கலந்துக் கொள்ள வேண்டும்
அகஇ - தொடக்க/உயர் தொடக்க "CRC" பயிற்சி வகுப்புகளில் தன்னார்வலர்கள் கட்டாயம் கலந்துக் கொள்ள வேண்டும் - மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள்
10ம் வகுப்பு 'பாஸ்' மாணவர்களுக்குவேலை வாய்ப்பு பதிவில் சலுகை
'பத்தாம்
வகுப்பு முடித்த மாணவர்கள், பள்ளிகளில், வேலை வாய்ப்புக்கு பதிவு
செய்தால், வரும், 19ம் தேதி வரை பதிவு மூப்பில் சலுகை வழங்கப்படும்' என,
அறிவிக்கப்பட்டுள்ளது.பத்தாம்
வகுப்பு பொதுத்தேர்வு, ஏப்ரலில் நடந்தது; மே, 21ம் தேதி முடிவுகள்
வெளியாகின. இதையடுத்து, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மட்டும்
வழங்கப்பட்டது; பின், மறு மதிப்பீடு, மறு கூட்டல் மற்றும் 'பெயில்'
ஆனவர்களுக்கான மறு தேர்வுகள் நடந்தன.
இடமாறுதல் வேண்டி விண்ணப்பித்த, 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் விண்ணப்பங்கள், இறுதி நாளில் நிராகரிக்கப்பட்டதால், சர்ச்சை!
கோவை மாவட்டத்தில்
இடமாறுதல் வேண்டி விண்ணப்பித்த, 100க்கும் மேற்பட்டஆசிரியர்களின்
விண்ணப்பங்கள், இறுதி நாளில் நிராகரிக்கப்பட்டதால், சர்ச்சை ஏற்பட்டது.
நடப்பு கல்வியாண்டிற்கான, பொது மாறுதல் கலந்தாய்வு, வரும் 12முதல் ௨௯ம்
தேதி வரை நடக்கின்றன. இதற்காக விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க இன்றுஇறுதி நாள்.








