2nd Mid Term Exam 2026
Padasalai Guides - Public Exam Question Bank
Padasalai Guides Previous Year Public Exams Questions Collection
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 11.11.21
திருக்குறள் :
பழமொழி :
Anger is a short madness
ஆத்திரக்காரனுக்கு புத்திமட்டு
இரண்டொழுக்க பண்புகள் :
1. உங்களை அழகாக்குவது
உங்களின் புன்னகை. புன்னகையுடன் இந்நாளை எதிர் கொள்ளுங்கள்.
2. உங்கள் அன்பு உள்ளங்களை வெல்லும் அனைவரிடமும் நேசத்துடன் பழகுங்கள்.
பொன்மொழி :
நாளைக்கு தள்ளி போடும் வேலைகளை மட்டும் தள்ளிப் போடுங்கள் இன்றைக்கு செய்ய வேண்டிய வேலைகளை இன்றே செய்து முடியுங்கள்.------ சுவாமி விவேகானந்தர்
பொது அறிவு :
1. நதிகள் இல்லா நாடு எது?
சவுதி அரேபியா.
2. 1000 ஏரிகள் கொண்ட நாடு எது?
பின்லாந்து
English words & meanings :
ஆரோக்ய வாழ்வு :
நெல்லிக்காய்
- கண்ணுக்குச் சிறந்த மருந்து இது. கண் சிவந்து புண்ணாகுதல் முதலிய வியாதிகளை குணப்படுத்தும்.அழகு சாதனப் பொருள்கள் தயாரிப்பதிலும் நெல்லிக் காய்க்கு பிரதான இடம் உண்டு. நெல்லியின் உள்ளிருக்கும் கொட்டைகளை நன்கு பொடி செய்து அதை தேங்காய் எண்ணெயில் கலந்து, நன்றாக கொதிக்க வைத்து, பின் குளிர வைத்து தலைக்குத் தடவி வந்தாலும், தலை பளபளப்பாகவும் கருமையாகவும், அடர்த்தியாகவும் இருக்க உதவும். தரமான தலை சாயங்களில் நெல்லி விதையைத்தான் பயன்படுத்துகிறார்கள்.
- முதுமையை தடுக்கும் குணம் நெல்லிக்கனிக்கு உண்டு என்பதை சித்தர்கள் முதல் பாமரர் வரை அறிவார்கள். ஆனால் நவீன ஆராய்ச்சி மூலம் இதை உண்மை என உரைத்திருக்கின்றனர். நெல்லிக்காயில் 8.75 மில்லி கிராம் வைட்டமின் சி உள்ளது. தாதுப்புக்களும், இரும்பு சத்தும் நிறைந்துக் காணப்படுகிறது.
- ஆரஞ்சு பழத்தை விட நெல்லிக்கனியில் 20 மடங்கு வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. ஆப்பிளை விட 3 மடங்கு புரதச்சத்து நெல்லியில் உள்ளது. அஸ்கார்பிக் அமிலம் என்னும் உயிர்ச்சத்து 160 மடங்கு நெல்லிக்கனியில் உள்ளது. நெல்லிவற்றல், பச்சைபயறு வகைக்கு 20 கிராம் எடுத்து 1 லிட்டர் நீர்விட்டு 200 மி.லி.ராக காய்ச்சி வடித்து, 100 மி.லி என காலையும் மாலையும் அருந்தி வந்தால் தலைச்சுற்றல் கிறுகிறுப்புடன் கூடிய இரத்தக்கொதிப்பு நீங்கும்.
கணினி யுகம் :
நவம்பர் 11
தேசிய கல்வி நாள்
தேசிய கல்வி நாள் (National Education Day) இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 11 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக விளங்கிய மௌலானா அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்தநாளை நினைவுகூரும் விதமாக இத்தினம் கொண்டாடப்படுகிறது. 15 ஆகத்து 1947 முதல் 2 பிப்ரவரி 1958 வரை இவர் கல்வி அமைச்சாராகப் பணியாற்றினார்.[
மௌலானா அபுல் கலாம் முகியுத்தின் அகமது அவர்களின் பிறந்தநாள்...
மௌலானா அபுல் கலாம் முகியுத்தின் அகமது (11 நவம்பர் 1888 – 22 பெப்ரவரி 1958) இந்திய விடுதலை இயக்கத்தின் மூத்த அரசியல் தலைவரும் இந்திய முசுலிம் அறிஞரும் ஆவார். சமய அடிப்படையிலான இந்தியப் பிரிவினையை எதிர்த்து இந்து- முசுலிம் ஒற்றுமையை வலியுறுத்திய முசுலிம் தலைவர்களில் முதன்மையானவர். இந்தியா விடுதலையடைந்த பிறகு அமைந்த முதல் இந்திய அரசில் கல்வி அமைச்சராகப் பணியாற்றியவர். பாக்கித்தான் பிரிவினையையும் அங்கு இராணுவ ஆட்சி ஏற்படப்போவதையும் முன்னரே தெரிவித்த பெருமை உடையவர்.பரவலாக இவர் மௌலானா ஆசாத்என அறியப்படுகிறார்; ஆசாத் (விடுதலை) என்பது இவர் வைத்துக்கொண்ட புனைப்பெயராகும்.
கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்களின் பிறந்தநாள்...
கி. ஆ. பெ. விசுவநாதம் (நவம்பர் 10, 1899 - டிசம்பர் 19, 1994) பரவலாக முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ, தமிழகத்தின் திருச்சியைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர் ஆவார். நீதிக்கட்சி உறுப்பினராக பிராமணரல்லாதோர் முன்னேற்றத்திற்காகவும் தமிழ்மொழியின் உயர்விற்காகவும் பாடுபட்டவர். இவர் எழுதியுள்ள 23 நூல்களும் தமிழ்வளர்ச்சித்துறையால் 2007-2008 இல் நாட்டுடைமையாக்கப்பட்டு பரிவுத் தொகை 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
நீதிக்கதை
இன்றைய செய்திகள்










