Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளவில்லை - இயக்குநர்

        499 ஆசிரியர்கள் நீக்கம் தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என இயக்குநர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பதில் மனு தாக்கல்

தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிகளில் கூடுதல் கட்டடங்கள் கட்டுவதில் சிக்கல்


            அரசு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட ஒன்பது பள்ளிகளில் நிதிப் பற்றாக்குறையால், கூடுதல் கட்டடங்கள் கட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஆசிரியர்களின் சிறந்த கற்பித்தல் செயல்பாடுகள் பகிர்தலும் பரவலாக்கலும்

              மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் - ஒன்று முதல் பன்னிரெண்டு வகுப்பு வரை கற்பிக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்களின் சிறந்த கற்பித்தல் செயல்பாடுகள் – கல்வியியல் மேலாண்மைத் தகவல் முறைமை (EMIS) மூலம் - பகிர்தலும் பரவலாக்கலும் - சார்பு.

Latest 12th Study Materials



Maths
  1. Maths 1st Unit Questions One Mark - Tamil Medium   
Prepared by Mr.VISVANATHAN R, PG Asst, GBHSS, Periyathachur, Tindivanam, Vilupuram Dt.

பட்டதாரி ஆசிரியரிலிருந்து உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு அடுத்த வாரத்தில் நடைபெறும் என எதிர்ப்பார்ப்பு


           பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவிகளுக்குகான பதவி உயர்வு கலந்தாய்வு அடுத்த வாரத்தில் நடைபெற உள்ளதென தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 

பிளஸ் 2 தனித்தேர்வு: இன்றுமுதல் இணையத்தில் விடைத்தாள் நகல்கள்

           பிளஸ் 2 தனித்தேர்வு விடைத்தாள் நகலை தேர்வர்கள் வியாழக்கிழமை (நவம்பர் 28) முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற பிளஸ் 2 தனித்தேர்வில் விடைத்தாள் நகலைக் கோரி ஏராளமான மாணவர்கள் விண்ணப்பித்தனர்.

 

ஓய்வூதியம் பெறுபவர்களின் கவனத்திற்கு


பாரத ஸ்டேட் பாங்கு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு.

பிப்ரவரியிலேயே தமிழக பட்ஜெட்.


           தமிழகத்தில் வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட்பிப்ரவரியில் தாக்கல் செய்யப்படவுள்ளது. 

 

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு வழக்கு 28.11.2013 அன்று விசாரணைக்கு வருமா?


          முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு உத்தரவிட்டதை எதிர்த்து தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச்செயலர், இயக்குநர், டிஆர்பி செயலர் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு மனு 28.11.2013 அன்று விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை.
 

புள்ளிவிவரங்களிலேயே ஆசிரியர்கள் கவனம் செலுத்த வேண்டிய நிலை கற்பித்தல் பணியில் பாதிப்பு


            பள்ளி ஆசிரியர்கள் கல்வித்துறை கேட்கும் பல்வேறு புள்ளிவிவரங் களை தருவதிலேயே கவனம் செலுத்த வேண்டிய நிலை உள்ளதால் கற் பித்தல் பணியில் பாதிப்பு ஏற்படுகிறது.

வளர்ச்சிக்கு உரமாகும் அரை மணி நேரம்


            பொருளாதாரத் தேவைகள் அதிகமாகிவிட்ட நிலையில் பெற்றோர் இருவரும் வேலைக்குச் சென்றால்தான் குடும்பத்தை நடத்த முடியும் என்றாகிவிட்டது. பொருளாதாரப் போட்டிகளோடு பயணிக்கும் வாழ்க்கையில், நகரப் பயணம் அதிகமான நேரத்தை விழுங்கிவிடுகிறது.

வரும் கல்வியாண்டில் பள்ளி செல்லா குழந்தைகள், மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு கவனம்


       2014-15 ஆம் கல்வி ஆண்டிற்கான ஆண்டு திட்ட நிதி வரைவில் பள்ளி செல்லா குழந்தைகளை மீள பள்ளியில் சேர்த்தல் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் முன்னேற்றம் ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி கூறினார்.


மணிக்கு 2 லட்சம் கி.மீ வேகத்தில் சூரியனை நோக்கி பாய்ந்து செல்லும் 'ஐசான்'!


          சூரியனை நோக்கி நகர்ந்து வந்த ஐசான் வால் நட்சத்திரம் தற்போது சூரியனுக்கு மிக அருகே போய் விட்டது. மணிக்கு 2 லட்சம் கிலோமீட்டர் என்ற வேகத்தில் அது படு வேகமாக போய்க் கொண்டிருக்கிறது.


ஏன் வேண்டும் பான் கார்டு?



            கருப்புப் பணத்தை ஒழிப்பது பற்றி அதிகம் பேசுவது நடுத்தர மக்கள்தான். லஞ்சம், கணக்கில் வராத வருவாய் இவையே கருப்புப் பணத்தின் ஊற்றுக்கண்கள். இந்தப் பிரச்சினையை முற்றிலும் தடுக்க இயலாது எனினும் படிப்படியாக குறைக்க முடியும்.

5ஆம் வகுப்புக்கான ஆங்கிலம், கணிதம், தகுதி தேர்வில் 10ஆயிரம் ஆசிரியர்கள் பெயில்


          பீகார் மாநில அரசு, பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் தகுதி தேர்வு நடத்தி வருகிறது. இந்த தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே ஆசிரியராக தொடர்ந்து பணியாற்ற முடியும்,

தமிழ் இணைய கல்விக் கழகத்தில் மென்பொருள் உருவாக்க மையம் துவங்க அரசு அனுமதி


          "சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ் இணைய கல்விக் கழகத்தில் தமிழ் மென்பொருள் உருவாக்க மையம் துவங்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது" என, அக்கழகத்தின் இயக்குனர் நக்கீரன் கூறினார்.

பி.ஏ. ஆங்கில தொடர்பியலும், பி.ஏ. ஆங்கிலமும் ஒன்றா? ஐகோர்ட்டில் 3 நீதிபதிகள் விசாரணை


    பி.ஏ.,ஆங்கில தொடர்பியல், பி.ஏ., ஆங்கிலத்திற்கு இணையானதா? என முடிவு செய்ய மதுரை ஐகோர்ட் கிளையில் 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் சாரணையை துவக்கியது.

பள்ளி மாணவியர் பாதுகாப்பு குறித்து வாழ்வியல் பயிற்சி


      ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த பிளஸ் 1 மாணவிகளுக்கு வாழ்வியல் திறன் குறித்த பயிற்சி நேற்று நடந்தது.

12th Latest Material Collection


Physics


  1. Physics Power Point Slides - OP-AMP Practical Inverting - Tamil Medium.
  2. Physics Power Point Slides - OP-AMP Practical Non- Inverting - Tamil Medium.
Prepared by Mr. B.Elangovan, PGAsst, PachaiyappasHSS, Kanchipuram

பணி அனுபவத்திற்கான மதிப்பெண் முழுமையாக கிடைக்காத சூழ்நிலை


          மாநில தகுதித் தேர்வு (ஸ்லெட்), தேசிய தகுதித் தேர்வு (நெட்)க்கு முந்தைய பணி அனுபவத்திற்கு, மதிப்பெண் கிடையாது' என, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) அறிவித்துள்ளது. இதன் காரணமாக, 50 சதவீதத்திற்கு மேற்பட்டோருக்கு, அனுபவத்திற்கான மதிப்பெண், முழுமையாக கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.


TET இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு மதிப்பெண் தளர்வு அரசுக்கு கோரிக்கை


            பொதுப்பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியதாவது: ஆசிரியர் தகுதித் தேர்வு உள்ளிட்ட அனைத்து தேர்வுகளிலும் இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு உரிய மதிப்பெண் தளர்வுகளை தமிழக அரசு திட்டவட்டமாக அறிவித்து நடைமுறைப்படுத்த வேண்டும். அரசு தனியார் கூட்டு மாதிரிப் பள்ளி திட்டம் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும். இந்த திட்டத்தை தமிழத்தில் செயல்படுத்த முடியாது என்று தமிழக அரசு திட்டவட்டமாக மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.


இது தான் கலிகாலம் போல இருக்கு பாஸ்! மாணவர்களின் வன்முறைகளை தடுக்க ஆசிர்யர்களுக்கு பயிற்சி.- நாளிதழ் செய்தி


மாணவர்களின் வன்முறைகளை தடுக்க ஆசிர்யர்களுக்கு பயிற்சி.- நாளிதழ் செய்தி

இந்து/சீக்கிய/புத்த மதங்களைப் பின்பற்றும் ஆதிதிராவிடர் மக்களுக்கு அரசியலமைப்பின் சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் உரிமைகளையும் பெற்றுக்கொள்ளலாம்

                     இந்து/சீக்கிய/புத்த மதங்களைப் பின்பற்றும் ஆதிதிராவிடர் மக்களுக்கு அரசியலமைப்பின் சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் உரிமைகளையும் பெற்றுக்கொள்ளலாம்.


ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் தளர்வு: அரசாணையை நடைமுறைப்படுத்த வலியுறுத்தல்....

       ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் தளர்வு: அரசாணையை நடைமுறைப்படுத்த வலியுறுத்தல்....

பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர் வழங்கும் திட்டம் முடக்கம் நாளிதழ் செய்தி.


பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர் வழங்கும் திட்டம் முடக்கம்

3ம் பருவ பாடப்புத்தகங்கள் வந்தாச்சு


   திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு வழங்குவதற்காக, மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் வந்துள்ளன. 

திறனாய்வுத் தேர்வில் பின்தங்கும் அரசு பள்ளி மாணவர்கள்!

           தேசிய திறனாய்வு தேர்வில்(என்.டி.எஸ்.,) பங்கேற்க அரசு பள்ளி மாணவர்கள் மத்தியில் தன்னம்பிக்கை ஏற்படுத்தவும், உரிய பயிற்சிகளை வழங்கவும், முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
 

SSA சார்பில் 1.53 கோடி நிதி ஒதுக்ககீடு.


           இந்த நிதி ஆனது பள்ளிகளுக்கு வகுப்பறை,கழிவறை,தலைமைஆசிரியர் அறை,குடிநீர் வசதி  கட்ட,ஒப்புதல் ஆணை பெறப்பட்டுள்ளது.

தொடர் அங்கீகாரம், ஆரம்ப அங்கீகாரம் பரிசீலனை - சிறப்பு முகாம்


           தற்காலிக தொடர் அங்கீகாரம், ஆரம்ப அங்கீகாரம் கோருகின்ற கருத்துருக்களை பரிசீலனை செய்து ஆணை வழங்கும் வகையில் சிறப்பு முகாம்

அரசு உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் 2000 தமிழாசிரியர் பணியிடங்கள் காலி


          அரசு உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் 2000 தமிழாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. பள்ளிக் கல்வித்துறையின் குளறுபடியால் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 
 

அன்று குழந்தைத் தொழிலாளி... இன்று பள்ளி தலைமை ஆசிரியை


                                      
             தன் தாயருடன் ராஜேஸ்வரிஅண்மையில் சென்னையில் நடந்த குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புக்கான விழிப்புணர்வு கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார் ஏ.ராஜேஸ்வரி. 

EMIS - Merging Tool


          The Completed EMIS School Database has to be merged at block level and the merging software with the steps for merging has been attached.The merging software and steps will be available on the following link.

EMIS Merging Tool:



அரசு அறிவிப்புகளில் தமிழ் தேதி அவசியம் போட வேண்டும் - அரசு அறிவிப்பு

             அரசு உத்தரவு மற்றும் அரசு அறிவிப்புகளில் தமிழ் தேதி அவசியம் போட வேண்டும் என்ற ஆணையை பின்பற்றவில்லையென்றால் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அரசு அறிவிப்பு

GOVT LTR - TO ENTER TAMIL DATE & YEAR IN GO & OFFICIAL ORDERS REG LETTER 

Latest 12th Study Material



Physics
  1. Physics 1st Volume 5 Mark Sum & Solutions - Tamil Medium
  2. Physics 1st Volume 5 Mark Sum & Solutions - English Medium
Prepared By Mr. T. Thamarai Selvan, PG.Asst., G.B.H.S.S, Aranthangi.



222 காலியிடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி., நடவடிக்கை


           இளநிலை உதவியாளர், நில அளவர் உள்ளிட்ட குரூப் - 4 நிலையில், நிரப்பப்படாமல் உள்ள 222 பணியிடங்களை நிரப்ப 5ம் கட்ட கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு டிச., 6ம் தேதி, சென்னையில் நடக்கிறது.
 

278 புதிய பல்கலைகள், 388 கல்லூரிகள்: மத்திய அரசு முடிவு


          நாட்டில் மேலும், 278 பல்கலைக்கழகங்கள், 388 கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதாக, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை உயரதிகாரி தெரிவித்தார்.
 

பதவி உயர்வு வழங்க வலியுறுத்தல்


          பள்ளி துவங்குவதற்கு முன், பல வகையான ஆசிரியர்களுக்கு, பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தி, உத்தரவுகள் வழங்கப்பட்டன. ஆனால், பள்ளி கல்வித் துறையில், தகுதி வாய்ந்த ஆசிரியர்களுக்கு, பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு மற்றும் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க, இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி த.ஆ மற்றும் ஆசிரியர்களுக்கு விரைவில் பயிற்சி

      "வளரிளம் மாணவ / மாணவியரிடையே ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கங்களை மேம்படுத்தி இரத்த சோகையைத் தடுத்தல்" சார்பான பயிற்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி த.ஆ மற்றும் ஆசிரியர்களுக்கு விரைவில் நடைபெறவுள்ளது.

லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்க உள்ளுர் விடுமுறை விபரம் சேகரிப்பு.


           லோக்சபா தேர்தல் தேதியை முடிவு செய்ய, 2014 ஜனவரி முதல் ஜூன் வரை அரசு மற்றும் உள்ளூர் விடுமுறை விபரங்களை அனுப்ப, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.லோக்சபா தேர்தல் 2014க்கான ஆயத்த பணிகளை தேர்தல் கமிஷன் துவக்கியுள்ளது.

தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க 29ந் தேதி கடைசி நாள்


இடைநிலை, மேல்நிலை தனித்தேர்வர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க        29 - ந் தேதி கடைசிநாள் 

இரட்டைப்பட்டம் வழக்கு விசாரணை மீண்டும் டிசம்பர் 13ஆம் தேதி அன்று வருகிறது


            இன்று ( 25.11.2013) சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் அமர்வில் தலைமை நீதியரசர் மதிப்புமிகு ராஜேஸ்குமார் அகர்வால் மற்றும் நீதியரசர் சத்தியநாரயணா முன்னிலையில் 12.15க்கு விசாரணைக்கு வந்தது. 

வாடகைப்படி வரிச் சலுகை கணக்கீடு எப்படி தெரிந்து கொள்வோமா!

வாடகைப்படி வரிச் சலுகை கணக்கீடு எப்படி?

அனைவருக்கும் கல்வி இயக்ககம் உத்தரவு

           U-DISE DATA Entry | UDISE தகவல் பதிவேற்றம் செய்யும் ஆசிரிய பயிற்றுனர்கள் / ஊழியர்களுக்கு தேநீர் மற்றும் மதிய உணவு வழங்க நாளொன்றுக்கு ரூபாய்.60 அனுமதித்து அனைவருக்கும் கல்வி இயக்ககம் உத்தரவு

தொடக்கக்கல்வி இயக்குனர் செயல்முறை வெளியீடு

          அரசு /அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு RBSK திட்டத்தின் மூலம் மருத்துவ பரிசோதனை நடத்த அனுமதித்தும் ஒத்துழைப்பு நல்கவும் அரசு கடிதம் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குனர் செயல்முறை வெளியீடு

தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு

        நீதிமன்ற வழக்குகளின் மீது ஆய்வு செய்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ள 27.11.2013 அன்று உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு கூட்டம் நடத்த தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு

தொடக்கக் கல்வி துறை உத்தரவு

          வருவாய்த்துறையின் மூலம் வழங்கப்படும் கணினி வழி சான்றிதழ்களை கல்வித்துறையில் அலுவலர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் ஏற்றுக்கொள்ள தொடக்கக் கல்வி துறை உத்தரவு

பாரதிதாசன் பல்கலை: முடிவுகள் வெளியீடு


        தொலைநிலை பி.எட் நுழைவுத்தேர்வு திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில், தொலைதூரக் கல்வி மையத்தில் பி.எட்., நுழைவுத்தேர்வுக்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
 

விளையாட்டுக்கு நிதி ஒதுக்கீடு இல்லை: ஆசிரியர்கள் புலம்பல்


            விளையாட்டுக்கு என தனியாக நிதி ஒதுக்குவதில்லை என அரசு பள்ளி ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.பள்ளியில் படிக்கும் மாணவர்களின் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவித்து மேம்படுத்துவதும் உடற்கல்வி குறித்த விழிப்புணர்வை அவர்கள் மத்தியில் ஏற்படுத்துவதும், விளையாட்டு ஆசிரியர்களின் முக்கிய பணி.
 

சத்துணவு மையங்களில் புதிய பணியாளர்கள் நியமனம்


         சத்துணவு மையங்களில் காலியாக உள்ள அமைப்பாளர், சமையலர் மற்றும் உதவியாளர் பணியிடங்கள் இன்னும் 20 நாட்களில் நிரப்பப்பட உள்ளன. இதற்கான நேர்முக தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு, பணி நியமன உத்தரவு தயார் நிலையில் உள்ளது.

Latest 12th Study Material


Physics
Mr. P. Ilayaraja, PG.Asst., Panchanthikulam, Nagapatinam.

Physics 2nd Volume Full Study Material - Tamil Medium


For Download More Study Material Collection - Click Here

ஆசிரியர்கள் அச்சம் தவிருமா?


          முன்பொருகாலத்தில் ஆசிரியர்கள் மீது மாணவர்களுக்குப் பக்தி, மரியாதை, பயம் முதலியன மேலோங்கிக் காணப்பட்டன. 

EMIS - Collections



Tutorials

How to EMIS - Photos Ready Offline with out Special Softwares -  
Click Here For Download Tutorial 5

How to EMIS - Photos Ready with Adobe Photoshop Software 
- Click Here For Download Tutorial 4


How to EMIS - Photos Ready within One Second via Online- 

அரசு தேர்வு மையங்களை தீர்மானிக்க கல்வி இணை இயக்குனர்கள் ஆய்வு ..........நாளிதழ் செய்தி


எஸ்.எஸ்.எல்.சி....மற்றும் பிளஸ்டூ தேர்வு மையங்கள் தீர்மானிக்க கல்வி இணை இயக்குனர்கள் ஆய்வு.

மாநில அளவில் தேசிய திறனாய்வு முதல்நிலை தேர்வு 98 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதினார்கள்

       உதவித்தொகை பெறுவதற்கான தேசிய திறனாய்வுத்தேர்வை எஸ்.எஸ்.எல்.சி. படிக்கும் மாணவர்கள் எழுதினார்கள். மாநில அளவில் நடந்த முதல் நிலைத்தேர்வில் 98 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர்.


சிலிண்டருக்கான மானியத்தை உங்கள் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பெறுவதற்கான வழிகாட்டல்கள் இங்கே…


         அக்டோபர் மாதத்திலிருந்து உங்கள் சிலிண்டருக்கான மானியத்தை உங்கள் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பெறுவதற்கான வழிகாட்டல்கள் இங்கே…

அகவிலைப்படியில் 50 சதவீதத்தை ஊதியத்துடன் இணைத்து வழங்க ஓய்வூதியர்கள் கோரிக்கை


      அகவிலைப்படியில் 50 சதவீதத்தை ஊதியத்துடன் இணைத்து வழங்க வேண்டும் என ஓய்வூதியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆலிவ் எண்ணெய் நமக்கு எப்படி எல்லாம் பயன்படுகிறது !!


               நமது தோலின் மேல்பகுதி எபிடெர்மிஸ், அடிப்பகுதி ஹைப்போடெர்மிஸ், மையப் பகுதி டெர்மிஸ் என்று அழைக்கப்படுகிறது. 
 

இரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்!


bananas-for-sleep             தூக்கமின்மை அப்படீங்கிறது, நம்மில் நிறைய பேருக்கு அன்றாட வாழ்க்கையின் தொல்லைகளில் ஒன்றாகவும், தினசரி வாழ்க்கையை பாதிக்கிற ஒரு விஷயமாகவும் இருக்கும்.

           அதை எப்படியாவது சரி செஞ்சிடனும்னு பாதிக்கப்பட்ட நாம எல்லாருமே, நாம படிச்ச கேள்விப்பட்ட அல்லது மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு யுக்தியை கையாண்டு, நம்ம தூக்கமின்மைய போக்க முயற்சி செஞ்சிருப்போம், இல்லீங்களா?

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வு டிசம்பர் ஒன்றாம் தேதி நடைபெறும்


            தமிழக அரசுத்துறைகளில் உள்ள 1064 பணியிடங்களுக்கான குரூப் 2 முதல்நிலைத் தேர்வு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் வரும் டிசம்பர் ஒன்றாம் தேதி நடைபெறுகிறது.

EMIS - மாணவர்களின் புகைப்படத்தை இணையதள வசதி இல்லாத கணிணியில் Resize செய்வது எப்படி?

EMIS - Offline Photo Resize Tutorial
Step By Step Instruction Now Available.

Step  1:

        எந்த புகைப்படத்தை Compress செய்ய வேண்டுமோ அதை Select செய்து Right Click செய்யவும். திரையில் தோன்ற கூடிய Windows Picture Manager ஐ Select செய்ய வேண்டும்.


EMIS - Photos Ready within One Second in Online


             EMIS - பணிக்காக 100 மாணவர்களின் புகைப்படங்களை கூட,  ஒரே நொடியில்  தேவையான 200 x 200 pixel (Below 30 kb) அளவிற்கு Resize செய்து பயன்படுத்துவது எவ்வாறு என்பது குறித்து Tutorial வெளியிட்டு உள்ளோம். நம் பாடசாலை வாசகர்கள் அனைவரும் இதை பயன்படுத்திப் பார்த்து தங்கள் நண்பர்கள் அனைவருக்கும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

- என்றும் அன்புடன் பாடசாலை.


அறிவிப்போடு நின்றுபோன சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு - மாற்றுத் திறனாளிகள் ஏமாற்றம்


           சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று முதல்வர் அறிவித்து ஒன்றரை மாதங்களுக்குமேல் ஆகியும் அரசாணை வெளியிடப்படாததால் மாற்றுத் திறனாளிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

32 செயற்கைக்கோள்கள்: ரஷ்ய ராக்கெட் சாதனை


            செயற்கைக்கோள்களை அனுப்புவதில், ரஷ்யாவும், அமெரிக்காவும் போட்டி போட்டுக் கொண்டு செயல்படுகின்றன. கடந்த வாரம், அமெரிக்க ராக்கெட் ஒன்று, 29 செயற்கைக்கோள்களை விண்ணுக்கு சுமந்து சென்று சாதனை படைத்தது.

பணியாளர்கள் நியமனம்: விண்ணப்பிக்க அழைப்பு


         தர்மபுரி மாவட்டத்தில் அட்மா எனப்படும் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமையில் தற்காலிக ஒப்பந்த அடிப்டையில் பணி தேர்வு முகமை மூலம் யூனியன் அளவில் காலியாக உள்ள நான்கு தொழில்நுட்ப மேலாளர் மற்றும் நான்கு தொழில்நுட்ப வல்லுநர்கள் என, எட்டு காலி பணியிடங்களுக்கு தகுதிவாய்ந்த பணியாளர்களை நிரப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

பள்ளிக்கூடங்கள் உருவாக்குவது இயந்திரங்களையா, மாணவர்களையா?


           வாழ்க்கையில் மறக்க முடியாதது பள்ளிப்பருவம். ஒரு மனிதனை மனிதனாக உருவாக்க அடித்தளமிடக்கூடியதும் பள்ளிப்பருவமே. 
 

பள்ளிக்கல்வியின் "நடமாடும் கவுன்சிலிங்" திட்டம் துவக்கம்: பாலியல் பிரச்னைகளுக்கு தீர்வு


          பள்ளிக்கல்வித்துறையின் மூலம் துவங்கிய "நடமாடும் கவுன்சிலிங்" திட்டத்தில் பாலியல் உட்பட பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கிறது.

உயர் கல்வி மேம்பாட்டுக்கு முன்னுரிமை: ஜெயலலிதா உறுதி


           மாநில அரசின் செயல் திட்டங்களில் உயர் கல்வி மேம்பாடு முதலாவதாக உள்ளது எனக் குறிப்பிட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா, மனிதவளத்தை மேம்பாடு அடையச் செய்ய சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஒரே பள்ளியில் பணிபுரியும் 10 ஆசிரியர்களை நீக்க தடை ஐகோர்ட் கிளை உத்தரவு


               ஒரே பள்ளியில் பணிபுரியும் 10 ஆசிரியர்களை, ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெறவில்லை என்ற காரணத்துக்காக பணி நீக்கம் செய்ய, ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.
 

பத்து விதமான பாதுகாப்பு அம்சங்களுடன் ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்


பத்து விதமான பாதுகாப்பு அம்சங்களுடன் ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்

தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட உள்ள ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்.

ஆசிரியர் தகுதித் தேர்வு, சான்றிதழ் விநியோகம்

ஆசிரியர் தகுதித் தேர்வு, மறுதேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கான ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் ஓரிரு வாரங்களில் விநியோகிக்கப்பட உள்ளது. இந்தச் சான்றிதழ்கள் இ-பார்கோடு உள்ளிட்ட 10 விதமான பாதுகாப்பு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தேர்வு எழுதியவரின் பெயர், பிறந்த தேதி, பதிவு எண், தேர்ச்சி பெற்ற தாள், விருப்பப் பாடம், மொழிப்பாடம், மதிப்பெண் உள்ளிட்ட விவரங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

ஆசிரியர் தகுதித் தேர்வு, மறுதேர்வு ஆகிய இரண்டுத் தேர்வுகளிலும் உரிய தகுதிகளோடு வெற்றி பெற்ற 18,600 பேருக்கான சான்றிதழ்கள் அச்சிடப்பட்டுள்ளன. சட்டவிரோதமாக வேறு யாரும் இந்தச் சான்றிதழ்களை அச்சிடாதவாறு ரகசிய பாதுகாப்பு அம்சங்கள் இந்தச் சான்றிதழில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரண்டு தேர்வுகளிலும் வெற்றி பெற்ற 18,600 பேரில் பெரும்பாலானோர் அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிக்குச் சென்றுள்ளனர். வெறும் 7 பேர் மட்டும் தங்களுக்குச் சான்றிதழே போதும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் தெரிவித்துள்ளனர்.

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை கற்பிக்க பணியில் சேரும் அனைத்து ஆசிரியர்களும் ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

2010 ஆகஸ்ட் 21-க்குப் பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர்களும் இந்தத் தேர்வை எழுதுவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற பிறகு 7 ஆண்டுகள் வரை இந்தச் சான்றிதழ் செல்லத்தக்கதாக இருக்கும். ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் இந்தத் தேர்வை எழுதலாம்.

தமிழிலேயே விவரங்கள்: ஆசிரியர் தேர்வு தொடர்பான அனைத்து விவரங்களும் இதுவரை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடப்பட்டு வந்தன. இனி அந்த விவரங்கள் அனைத்தும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

அதேபோல், ஒவ்வொரு ஆசிரியர் தேர்வுக்கும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள், தகுதியான படிப்புகள் என்ன என்பன உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய ஆசிரியர் தேர்வுக் கொள்கையும் இப்போது உருவாக்கப்பட்டு வருகிறது.

தகுதியில்லாதவர்களும், வேறு படிப்புகளைப் படித்தவர்களும் ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பித்து ஏமாற்றமடைவதைத் தவிர்க்கவும், ஆசிரியர் தேர்வில் குழப்பங்களைக் களையவும் இது உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.பத்து விதமான பாதுகாப்பு அம்சங்களுடன் ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட உள்ள ஆசிரியர் தகுதிச் சான்றிதழ். ஆசிரியர் தகுதித் தேர்வு, சான்றிதழ் விநியோகம் ஆசிரியர் தகுதித் தேர்வு, மறுதேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கான ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் ஓரிரு வாரங்களில் விநியோகிக்கப்பட உள்ளது. 
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive