NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பயிற்சி பெற முடியாமல் தவிக்கும் விளையாட்டு வீரர்கள் 76 அரசு கலைக்கல்லூரிகளில் உடற்கல்வி இயக்குநர்கள் இல்லை.

           தமிழக உயர்கல்வித்துறையின் கீழ், 89 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. 
 
         கல்லூரிகளில் விளையாட்டு திறனை மேம்படுத்த, விளையாட்டு படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் உடற்கல்வி இயக்குநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உதவியாக, விளையாட்டு உதவியாளரும் (குறியீட்டாளர்) பணியமர்த்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தற்போது, 13 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மட்டுமே உடற்கல்வி இயக்குநர்கள் உள்ளனர். மீதி 76 கல்லூரிகளில் இயக்குநர் பணியிடம் காலியாக உள்ளது. 20க்கும் மேற்பட்ட பயிற்சியாளர் பணியிடமும், 70க்கும் மேற்பட்ட கல்லூரிகளில், உதவியாளர் பணியிடமும் நிரப்பப்படாமல் உள்ளது. இதனால் கல்லூரிகளில் விளையாட்டில் திறமை வாய்ந்த மாணவர்களை கண்டறிந்து தொடர் பயிற்சி வழங்கமுடியாத நிலை ஏற்படுகிறது.


இதுகுறித்து அரசு கல்லூரி பேராசிரியர்கள் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரிகள் மட்டுமின்றி, பெரும்பாலான அரசு பொறியியல் கல்லூரிகளிலும் விளையாட்டு துறை இயக்குநர்கள், பயிற்றுநர்கள் மற்றும் உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. உடற்கல்வி இயக்குநர்களை டிஎன்பிஎஸ்சி அல்லது டிஆர்பி தேர்வுகள் மூலமாகவோ, பணிமூப்பு அடிப்படையிலோ நியமனம் செய்வது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால், கடந்த 1999ம் ஆண்டுக்கு பிறகு உடற்கல்வி இயக்குநர்கள் புதிதாக நியமனம் செய்யப்படவில்லை. இவ்வழக்கை முடிக்கவோ, புதிய உடற்கல்வி இயக்குநர்களை நியமிக்கவோ மாநில அரசு எந்தவித நடவடிக்ைகயும் எடுக்கவில்லை. கல்லூரி கல்வி இயக்குநரின் அனுமதி பெற்று, அந்தந்த கல்லூரி முதல்வர்களே நியமனம் செய்ய வேண்டிய பயிற்சியாளர் பணியிடமும் காலியாக இருப்பது வேதனையளிக்கிறது. 
இதனால் திறமை, ஆர்வம் இருந்தும் அரசு கல்லூரி மாணவர்கள் முடக்கப்படுகின்றனர். அரசு கல்லூரிகளை சார்ந்துள்ள கிராமப்புற வீரர், வீராங்கனைகள் உரிய பயிற்சி கிடைக்காமல் அவதியடைகின்றனர். 

இதன் காரணமாகவே தனியார் கல்லூரிகளுக்கு இணையாக, அரசு கல்லூரி மாணவர்கள் சாதிக்க முடிவதில்லை. விளையாட்டு வீரர்களுக்கு போதிய நிதி ஆதாரம் கிடைக்காததும், அரசு கல்லூரி மாணவர்கள் சாதனை படைக்க ஒரு தடையாக உள்ளது. அரசு கல்லூரிகள் விளையாட்டு துறைக்கென, ஆண்டுதோறும் ரூ.100 கட்டணமாக ஒவ்வொரு மாணவர்களிடம் வசூலிக்கிறது. இந்த தொகையை வைத்து, விளையாட்டு உபகரணங்கள் வாங்குதல் மற்றும் பராமரிப்பு செலவுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதால், கூடுதல் செலவுகள் செய்ய முடிவதில்ைல. தற்போது மாநிலம் முழுவதும் பணியில் உள்ள 13 உடற்கல்வி இயக்குநர்கள் அடுத்து வரும் ஓரிரு ஆண்டுகளில் ஓய்வுபெறவுள்ளனர். இதனால், காலியிடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது. எனவே, மாநிலம் முழுவதும் காலியாக உள்ள உடற்கல்வி இயக்குநர்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப, அரசு நடவடிக்ைக எடுக்க வேண்டும். இவ்வாறு பேராசிரியர்கள் தெரிவித்தனர்




1 Comments:

  1. you can write many more article such as this but no response from anyone.it all our fate.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive