காமராஜர் பல்கலையில் ஐ.ஏ.எஸ்., தேர்வு பயிற்சி

       சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான இலவச பயிற்சி பெற, அக்., 31க்குள் விண்ணப்பிக்கும்படி, மதுரை காமராஜர் பல்கலை அறிவித்துள்ளது. பல்கலையின் சிவில் சர்வீசஸ் தேர்வு பயிற்சி அகாடமி ஒருங்கிணைப்பாளர், வேளாங்கண்ணி ஜோசப் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அடுத்த ஆண்டு முதல்நிலை தேர்வு எழுத, பயிற்சி பெற விரும்புவோருக்கு, நவ., 20ல் தகுதித் தேர்வு நடத்தப்படும்; இதற்கு, அக்., 31க்குள் விண்ணப்பம் அளிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை, http://mkuniversity.org இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பத்துடன் சான்றிதழ் நகல்களை இணைக்க வேண்டும். 'பயிலக இயக்குனர் / ஒருங்கிணைப்பாளர், அண்ணா நுாற்றாண்டு குடிமை பணிகள் பயிற்சி அகாடமி, இளைஞர் நல படிப்பியல் துறை, மதுரை காமராஜர் பல்கலை, மதுரை - 625 021' என்ற முகவரிக்கு, விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். அதில், 100 பேர் தேர்வு செய்யப்பட்டு, இலவச தங்குமிடம், உணவு மற்றும் சாதனங்களுடன் பயிற்சி தரப்படும்.இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive