உள்ளாட்சி தேர்தல்: தமிழகத்தில் 5.80 கோடி வாக்காளர்கள்

சென்னை, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பெ.சீத்தாராமன் வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:
சட்டமன்ற தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலின் அடிப்படை விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் பெற்று, உள்ளாட்சி தேர்தலுக்காக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், தேசிய தகவல் தொடர்பு மையத்துடன் இணைந்து ஆன்–லைன் முறையில் உள்ளாட்சி தேர்தலுக்கான புகைப்பட வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 2.88 கோடி ஆண் வாக்காளர்கள், 2.92 பெண் வாக்காளர்கள், 4 ஆயிரத்து 584 இதர வாக்காளர்கள் என்று மொத்தம் 5.80 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.இதில் ஊரக பகுதிகளில் 1.59 கோடி ஆண் வாக்காளர்கள், 1.60 கோடி பெண் வாக்காளர்கள், 1,629 இதர வாக்காளர்கள் என்று மொத்தம் 3.19 கோடி வாக்காளர்களும், நகர்ப்புறங்களில் 1.29 கோடி ஆண் வாக்காளர்கள், 1.32 கோடி பெண் வாக்காளர்கள், 2 ஆயிரத்து 955 இதர வாக்காளர்கள் என்று மொத்தம் 2.61 கோடி வாக்காளர்களும் உள்ளனர்.

Share this