Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்கள் புத்தகங்களை சுமக்க தேவையில்லை

         சிபிஎஸ்இ இயக்குனரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அதிக சுமையுடன் கூடிய புத்தகப்பையை மாணவர்கள் சுமப்பதால் அவர்களுக்கு உடல் நலன் பாதிக்கப்படுவதுடன் பக்க விளைவுகள் ஏற்படும். 

        குறிப்பாக மாணவர் பருவத்தில் முதுகெலும்பு வளர்ச்சியடையும் பருவம். எனவே அப்பருவத்தில் அதிக பாரமான புத்தகப்பையை சுமப்பதால் முதுகுதண்டு வலி, சதை வலி, தோள்பட்டை வலி, தலைவலி ஆகியவை ஏற்படக்கூடும். எனவே பள்ளிகளில் கால அட்டவணைப்படி புத்தகங்கள் எடுத்து வரவும், தேவையற்ற பொருட்களை மாணவர்கள் எடுத்து வருவதை தவிர்க்கவும் ஆலோசனை வழங்க வேண்டும். மாணவர்கள் குடிக்க தகுந்த சுத்தமான குடிநீரை  வழங்குவதுடன் அதையே ஆசிரியர்களும், பள்ளி முதல்வரும் குடிக்க வேண்டும். 
சிபிஎஸ்இ பள்ளிகள் 1 முதல் 8 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு குறைந்த எடையுடைய புத்தகங்களை வழங்குவதோடு மட்டுமல்லாமல் அதிக புத்தகங்களை வழங்கக்கூடாது. குறிப்பாக 1 மற்றும் 2ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது. மேலும் அவர்கள் பள்ளிக்கு புத்தகப்பையை சுமந்து வர வேண்டியதில்லை. இதேபோல் ஆசிரியர்கள் பாடப்புத்தகங்களை எடுத்து வர மாணவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது. வொர்க்புக்கில் உள்ள தனி தாள்களை மாணவ, மாணவியருக்கு தருவதாலும் புத்தகச்சுமை குறையும். பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் புத்தகப்பையை தினந்தோறும் சரி பார்த்து புத்தகங்களை மாற்றி தர வேண்டும். தோள்களில் தொங்கும் பையோ, இறுக்கமான முதுகு பையோ கூடாது. இதுகுறித்து அனைத்து பள்ளிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive