சென்னைசெவ்வாய் கிரகத்தை ஆராய அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலத்துக்கு கிரகணத்தால் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இஸ்ரோ தலைவர் கிரண்குமார் கூறினார்.
சென்னையில் கிரண்குமார் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வானிலையை மிகத்துல்லியமாக கணிக்க உதவும் ‘ஸ்கேட்சாட்–1’ செயற்கை கோள் மற்றும் 7 செயற்கை கோள்களுடன் பி.எஸ்.எல்.வி.சி–35 ராக்கெட் இன்று (திங்கட்கிழமை) காலை, விண்ணில் செலுத்தப்படுகிறது.இதை நேரில் காண்பதற்கு ஸ்ரீஹரிகோட்டா செல்லும் வழியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோவின் தலைவர் கிரண்குமார் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–பி.எஸ்.எல்.வி.சி–35 ராக்கெட்டில் 8 செயற்கைகோள்கள் இணைக்கப்பட்டு உள்ளன. இதில் வெளிநாடுகளை சேர்ந்த 5 செயற்கைகோள்களும், இந்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 2 செயற்கைகோள்களும், இந்திய செயற்கைகோள் ஒன்றும் அடங்கும்.இறங்குவரிசை ஏற்பாடுகள் இந்த ராக்கெட்டின் ஆயத்த பணிகள் சிறப்பாக செய்யப்பட்டு வருகின்றன. இதற்கான ‘கவுண்ட்டவுன்’ (இறங்குவரிசை ஏற்பாடுகள்) தொடங்கி நடந்து வருகின்றன.இந்த ராக்கெட் திட்டமிட்டபடி நாளை(அதாவது இன்று) விண்ணில் செலுத்தப்படும். இந்தியாவில் முதன்முறையாக ஒரே ராக்கெட்டை இருவேறு சுற்றுவட்ட பாதையில் இயக்கி செயற்கைகோளை நிலை நிறுத்தும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.மங்கள்யான் செவ்வாய் கிரகத்தை ஆராய விண்ணில் செலுத்தப்பட்ட மங்கள்யான் விண்கலத்தின் திட்டக்காலம் 6 மாதம்தான் என்றாலும்கூட, அது செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையில் இணைந்து 2 ஆண்டுகள் முடிந்து விட்டன. முதல் ஆண்டு காலத்தில் அதன் 5 தரவுகள் மூலம் பெறப்பட்ட ஏராளமான தகவல்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.நடவடிக்கை அந்த விண்கலம் சந்திக்க உள்ள கிரகணத்தால் ஏற்படுகிற தாக்கத்தின் அளவை குறைப்பதற்காக அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நாங்கள் ஒரு நடவடிக்கை எடுப்போம்.கிரகணத்தின்போது, விண்கலத்தின் இயக்கத்துக்கு அதன் பேட்டரி துணை நிற்க வேண்டும். ஆனால் கிரகண காலம் நீளுமானால், விண்கலத்துக்கு பேட்டரி துணை நிற்க முடியாமல் போகலாம்.எனவே கிரகணத்தால் பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதற்கு, நாங்கள் நடவடிக்கை எடுக்க உத்தேசித்து இருக்கிறோம். அதனைக் கொண்டு, இன்னும் பல ஆண்டுகள் விண்கலம் செயல்பட முடியும். அதற்கு தேவையான ஏராளமான எரிபொருள் அதில் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.Quarterly Exam Questions Answers
- 12th Quarterly Questions & Answers 2026
- 11th Quarterly Questions & Answers 2026
- 10th Quarterly Questions & Answers 2026
- 9th Quarterly Questions & Answers 2026
- 8th Quarterly Questions & Answers 2026
- 7th Quarterly Questions & Answers 2026
- 6th Quarterly Questions & Answers 2026
- Study Materials Download
- 2nd Mid Term Questions
Home »
» செவ்வாய் கிரகத்தை ஆராய அனுப்பப்பட்ட மங்கள்யானுக்கு கிரகணத்தால் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை இஸ்ரோ தலைவர் கிரண்குமார் பேட்டி







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...