60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Total Pageviews

CBSE ரிசல்ட்' தாமதம் : உயர் கல்வி சேர்வதில் சிக்கல்.

           மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யின், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தாமதம் ஆவதால், உயர் கல்விக்கு செல்ல முடியாமல்,மாணவர்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
 
        தமிழகம், ஆந்திரா, கேரளா போன்ற, மாநில அளவிலான பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவுகள், மே இரண்டாம் வாரத்திற்குள் வெளியாகின்றன.
சி.பி.எஸ்.இ.,யின், 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே இறுதி வாரம் அல்லது ஜூன் முதல் வாரத்தில் தான் வெளியாகிறது. சி.பி.எஸ்.இ., மாணவர்களின் மறு மதிப்பீடு, மறு கூட்டல் மற்றும் உடனடி துணைத்தேர்வுமுடிவுகள், ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில்தான் வெளியாகின்றன. அதற்குள், அனைத்து இன்ஜி., கல்லுாரிகள் மற்றும் கலை, அறிவியல் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை முடிந்து விடுவதால், பல மாணவர்கள், கல்லுாரிகளில் சேர முடிவதில்லை. இவர்கள், காத்திருந்து, அடுத்த ஆண்டில் தான் சேர வேண்டி உள்ளது. இந்த பிரச்னை குறித்து, சேலத்தில் நடந்த, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டத்தில், விவாதிக்கப்பட்டது.
இதுகுறித்து, அமைப்பின் தலைவர், மனோகரன் கூறுகையில்,''சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாவதில் ஏற்படும் தாமதத்தால், மாணவர்கள் பலர், உயர்கல்வியில் சேர முடிவதில்லை. சிக்கலுக்கு தீர்வு காண, சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவுகளை, தாமதமின்றி வெளியிட வேண்டும்,'' என்றார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Blog Archive