Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

அடுத்த மாதத்தில் இருந்து சிறிய எல்இடி டிவி விலை அதிகரிக்க வாய்ப்பு

சிறிய எல்இடி டிவி விலை அடுத்த மாதத்தில் இருந்து அதிகரிக்க உள்ளது. எல்சிடி டிவி வாங்கச்செல்பவர்கள் கூட, விலை சற்று அதிகம் இருந்தாலும் எல்இடி டிவி வாங்கி வருகின்றனர்.
இந்திய சந்தையில் 32 அங்குலம் மற்றும் அதற்கு கீழ் உள்ள மாடல்களுக்குதான் நடுத்தர மக்களிடையே மவுசு அதிகம். ஆனால் வெளிநாடுகளில் சாதாரணமாக 42 அங்குல எல்இடி டிவி வாங்கி வந்த மக்கள், தற்போது 48 அங்குல டிவி வாங்குதையே விரும்புகின்றனர். இதனால் சிறிய எல்இடி பேனல்கள் உற்பத்தி குறைந்து தட்டுப்பாடு ஏற்பட்டு விட்டது. எனவே, பேனல் 42 அங்குலத்துக்கு கீழ் உள்ள எல்இடி பேனல் விலை 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளன.

இதனால், சிறிய எல்இடி டிவி விலை குறைந்தது 5 சதவீதம் முதல் 8 சதவீதம் வரை அதிகரிக்க வேண்டியிருக்கும் என்றும், அடுத்த மாதம் முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வரலாம் என்றும் டிவி உற்பத்தி நிறுவனங்கள் தரப்பில் கூறப்படுகிறது. ‘‘32 அங்குலம் மற்றும் 40 அங்குல டிவி இடையே உள்ள விலை வித்தியாசம் சுமார் ரூ.6,000ல் இருந்து ரூ.4,000ஆக குறைந்து விட்டது. இதனால் 32 அங்குல டிவி வாங்கும் பலரும் 40 அங்குல டிவி வாங்குவது அதிகரித்து வருகிறது. இதுவும் சிறிய பேனல் தேவை குறைவுக்கு ஒரு காரணம்’’ என டிவி உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தீபாவளி பட்ஜெட் கடிக்குமா?

டிவி, பிரிட்ஜ் போன்ற அதிக விலை கொண்ட வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை தீபாவளி பண்டிகையில்தான் அதிகரிக்கும். எனவே இந்த விலை உயர்வை இப்போதைக்கு அமல்படுத்த சில நிறுவனங்கள் விரும்பவில்லை. அதிலும், 7வது சம்பள கமிஷன் பரிந்துரை, தீபாவளி போனஸ் போன்றவை இந்த ஆண்டு பண்டிகை விற்பனையை உயர்த்தும் எனவே, தீபாவளிக்கு பிறகு விலை உயர்த்த சில நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. அதேநேரத்தில், அக்டோபருக்கு பிறகு சிறிய பேனல் சப்ளையில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டு இவற்றின் விலை மேலும் 18 முதல் 20 சதவீதம் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive