60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Total Pageviews

'செனட், சிண்டிகேட்'டுக்கு புதிய உறுப்பினர்கள் : சென்னை பல்கலை தேர்தலின் பரபரப்பு முடிவு.

          சென்னை பல்கலையின் கல்விக் கவுன்சில் கூட்டத்தில், பரபரப்பான போட்டிக்கு இடையில், பேராசிரியர் பேரவையை சேர்ந்த பிரதிநிதிகள், அதிக அளவில் தேர்ச்சி பெற்றனர். 

               சென்னை பல்கலையின் கல்விக் கவுன்சில் கூட்டம், இரண்டு நாட்களுக்கு முன் நடந்தது. இதில், கல்விக் கவுன்சிலில் இருந்து, சிண்டிகேட் மற்றும் செனட் மன்றத்திற்கான உறுப்பினர் தேர்வுக்கான தேர்தல் நடந்தது. சிண்டிகேட்டின் நான்கு காலி இடங்களுக்கு, பேராசிரியர் பேரவை, சென்னை பல்கலை ஆசிரியர் சங்கம் மற்றும் சுயேச்சை என, தலா நான்கு பேர் வீதம், 12 பேர் போட்டியிட்டனர். இவர்களில், பேராசிரியர் பேரவை முன்னிறுத்திய, ஆசான் நினைவு கலை, அறிவியல் கல்லுாரி முதல்வர், ராமநாதன்; திருத்தங்கல் நாடார் கலை, அறிவியல் கல்லுாரி முதல்வர், முருகேசன்; குருநானக் கல்லுாரி முதல்வர், செல்வராஜ் என, மூன்று பேர் வெற்றி பெற்றனர். சென்னை பல்கலை ஆசிரியர் சங்கம் சார்பில், பச்சையப்பன் கல்லுாரி பேராசிரியர் ஷேட்டு வெற்றி பெற்றார். செனட் உறுப்பினர் தேர்தலில், பேராசிரியர் பேரவை சார்பில் போட்டியிட்ட, சென்னை பல்கலை பேராசிரியர், பாஸ்கர்; டி.ஜி.வைஷ்ணவா கல்லுாரி முதல்வர், வெங்கட்ராமன்; நியூ கல்லுாரி பேராசிரியர், பஷீர் அகமது; திருத்தங்கல் நாடார் கலை, அறிவியல் கல்லுாரி துறைத்தலைவர், ஆசைத்தம்பி; ஸ்ரீதேவி கலை, அறிவியல் கல்லுாரி முதல்வர் லட்சுமிபதி; எஸ்.ஐ.வி.இ.டி., கல்லுாரி கணிதத் துறை தலைவர் திரிசங்கும் வெற்றி பெற்றனர். பல்கலை ஆசிரியர் சங்கம் சார்பில், சென்னை பல்கலையின் ஆனந்தி, ராணி மேரி கல்லுாரியை சேர்ந்த அனுராதா; விவேகானந்தா கல்லுாரியை சேர்ந்த, காந்திராஜன் மற்றும் குருநானக் கல்லுாரியை சேர்ந்த சேதுராமனும், செனட் உறுப்பினராக வெற்றி பெற்றனர். இந்த தேர்தலில், பேராசிரியர் பேரவை சார்பில் போட்டியிட்டவர்களே அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். சென்னை, பிரபல கல்லுாரிகளின் பிரதிநிதிகள், தோல்வி அடைந்தனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Blog Archive