அரசு பள்ளி வகுப்பறையில் பயங்கரம்: ஆசிரியர் குத்திக் கொலை; 2 மாணவர்கள் வெறிச்செயல்

     புதுடெல்லி: டெல்லி நங்லாய் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு முகேஷ் குமார் என்பவர் இந்தி ஆசிரியராக பணியாற்றி வந்தார். 
 
     நேற்று முன்தினம் மாலை 5 மணியவில் வகுப்பறையில் தேர்வு நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த பிளஸ் 2 மாணவர் ஒருவர் தன்னை ஏன் தேர்வு எழுத விடவில்லை என்று ஆசிரியர் முகேஷ் குமாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது போதிய வருகை பதிவு இல்லாததால் தான் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை என்று ஆசிரியர் பதிலளித்தார். 

இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றவே, அங்கு தேர்வு எழுதிக்கொண்டிருந்த மாணவர் ஒருவர், நண்பனுக்கு ஆதரவாக மறைத்து வைத்திருந்த கத்தியால் திடீரென ஆசிரியரைக் குத்தினார். அதைத்தொடர்ந்து வாக்குவாதம் செய்த மாணவரும் ஆசிரியரை கத்தியால் குத்தினார். சகமாணவர்கள் முன்னிலையில் தொடர்ந்து 3 முறை ஆசிரியரை சரமாரியாக குத்திய மாணவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி சென்றனர்.

அதிர்ச்சியடைந்த மாணவர்கள் உடனே மற்ற வகுப்பு ஆசிரியர்களுக்கு தகவல் கொடுத்து வரவழைத்தனர். பின்னர் ரத்த வெள்ளத்தில் மயங்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆசிரியர் முகேஷ் குமாரை உடனடியாக பள்ளி அருகேயுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த ஆசிரியர் முகேஷ் குமார் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆசிரியரை கத்தியால் குத்திய 2 மாணவர்களையும் போலீசார் சில மணி நேரத்திலேயே கைது செய்தனர். இறந்த ஆசிரியர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்குவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive