Total Pageviews

குரூப் 4 தேர்வு மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு

              சென்னை கலெக்டர் சுந்தரவல்லி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 4 தேர்வு வரும் டிசம்பர் 21ம் தேதி நடைபெறுகிறது.

              இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளன. இப்பயிற்சி வகுப்பில் பொதுத்தமிழ், பொது அறிவு, நடப்பு நிகழ்வுகள், மனத்திறன், உளச்சார்பு, நேர நிர்வாகம் உள்ளிட்ட தலைப்புகளில் வகுப்புகள் நவம்பர் 5 முதல் 16ம் தேதி வரை நடைபெற உள்ளன. பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் மாற்றுத் திறனாளிகள் கிண்டியிலுள்ள ஒருங்கிணைந்த மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.




1 Comments:

  1. TNPSC (GROUP IV) and RRB Exams will be held on 21st December 2014. How is it possible to attend both?

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive