NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தொடர் விடுமுறை: உதகைக்கு 2 நாளில் 30 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வருகை

         தொடர் விடுமுறையின் காரணமாக உதகையில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது.
 
               கடந்த 2 நாள்களில் மட்டும் சுமார் 30,000 சுற்றுலாப் பயணிகள் உதகை அரசினர் தாவரவியல் பூங்காவை பார்வையிட்டுள்ளனர்.

       தொடர் விடுமுறை மற்றும் கோடை சீஸன் காரணமாக உதகையில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் மிக அதிகமாக உள்ளது. தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்து மட்டுமின்றி கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் மிக அதிக அளவில் உதகையில் குவிந்துள்ளனர்.

       உதகையில் அரசினர் தாவரவியல் பூங்காவுக்கு கடந்த 2 நாள்களில் மட்டும் சுமார் 30,000 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். தாவரவியல் பூங்காவில் தற்போது புல் தரையில் சுற்றுலாப் பயணிகள் நடந்து செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும், பூங்காவில் எதிர்வரும் மலர்க் காட்சிக்காக மலர்ச்செடிகள் நடவு செய்யப்பட்டு பூக்களே இல்லாத நிலையிலும் கூட சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிக அளவில் உள்ளது.

        இதேபோல, உதகை படகு இல்லம், அரசினர் ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலைச்சிகரம், மரவியல் பூங்கா ஆகியவற்றுடன் வனப்பகுதிகளை ஒட்டியுள்ள சுற்றுலா மையங்களிலும், தனியார் கேளிக்கை பூங்காக்களிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் மிக அதிகமாக உள்ளது.

            இதுகுறித்து, நீலகிரி மாவட்ட தோட்டக்கலை இணை இயக்குநர் மணி கூறுகையில், "உதகையில் அரசினர் தாவரவியல் பூங்காவுக்கு வெள்ளிக்கிழமை 13,710 சுற்றுலாப் பயணிகளும், சனிக்கிழமை 15,930 சுற்றுலாப் பயணிகளுமாக சுமார் 30,000 பேர் வருகை தந்துள்ளனர்' என்றார். இதுதவிர தாவரவியல் பூங்காவுக்கு வராமலேயே உதகையில் தங்கியுள்ள சுற்றுலாப் பயணிகளும் அதிகளவில் இருப்பதால், உதகையில் எங்கெங்கும் சுற்றுலாப் பயணிகளே தென்படுகின்றனர்.

         இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதுடன், ஈஸ்டர் பண்டிகை நாளாகவும் இருப்பதால் உதகையில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் மேலும் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive