Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNEB ல் 700 இளநிலை உதவியாளர், தட்டச்சர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

       தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் சோதகர் வேதியர், இளநிலை உதவியாளர், நிர்வாகம், இளநிலை உதவியாளர் கணக்கு, இளநிலை தணிக்கையாளர், சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் தட்டச்சர் பணிகளுக்கான காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்காக, தகுதியுள்ள உள்ளவர்களிடமிருந்து எழுத்துத்தேர்விற்கு 02.03.2016 முதல் 16.03.2016 வரை இணைய வழிமூலம் மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்களும், ஆட்குறைப்பு காரணமாகவும் மற்றும் பல்வேறு காரணங்களால் மூடப்பட்ட அரசுத்துறையில் பணியாற்றி வேலையிழந்த பணியாளர்களும், முன்னாள் இராணுவ வீரர்களும் கீழ்வரும் பணியிடங்களுக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

அறிவிப்பு எண்.02/2016   தேதி: 29.02.2016

பணி: சோதகர் வேதியர்

காலியிடங்கள்: 100

சம்பளம்: மாதம் ரூ.5400 - 20,200 தர ஊதியம் ரூ.2,800

தகுதி: வேதியியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: இளநிலை உதவியாளர் (நிர்வாகம்)

காலியிடங்கள்: 100

சம்பளம்: மாதம் ரூ.5400 - 20,200 தர ஊதியம் ரூ.2,200

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: இளநிலை உதவியாளர் (கணக்கு)

காலியிடங்கள்: 250

சம்பளம்: மாதம் ரூ.5,400 - 20,200 தர ஊதியம் ரூ.2200

தகுதி: வணிகவியல் பிரிவில் பி.காம் முடித்திருக்க வேண்டும்.

பணி: இளநிலை தணிக்கையாளர்

காலியிடங்கள்: 900

சம்பளம்: மாதம் ரூ.5,400 - 20,200 தர ஊதியம் ரூ.2200

தகுதி: பி.ஏ., பி,எஸ்சி, பி.காம் முடித்திருக்க வேண்டும்.

பணி: சுருக்கெழுத்து தட்டச்சர்

காலியிடங்கள்: 25

சம்பளம்: மாதம் ரூ.5,400 - 20,200 தர ஊதியம் ரூ.2200

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதாவது தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுநிலை அல்லது தமிழில் முதுநிலை மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை அல்லது ஆங்கிலத்தில் முதுநிலை மற்றும் தமிழில் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: தட்டச்சர்காலியிடங்கள்: 200

சம்பளம்: மாதம் ரூ.5,400 - 20,200 தர ஊதியம் ரூ.2200

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதாவது தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுநிலை அல்லது தமிழில் முதுநிலை மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை அல்லது ஆங்கிலத்தில் முதுநிலை மற்றும் தமிழில் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினரும் ரூ.500. ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு ரூ.250, அனைத்து பிரிவினை சார்ந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு - 250

விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 02.03.2016

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.03.2016

தேர்வு கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 18.03.2016

தேர்வு நடைபெறும் தேதி மற்றும் நேரம்: ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கான தேதி பின்னர் www.tangedco.directrecuitment.in  என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tangedco.directrecuitment.in என்ற இணையதளத்தைபார்க்கவும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive