பிளஸ்
2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியை
சேர்ந்த 7082 பள்ளிகளை சேர்ந்த 8 லட்சத்து 88 ஆயிரம் பிளஸ் 2 மாணவர்கள்
தேர்வை கடந்த மாதம் எழுதினர். மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி கடந்த
வாரம் முடிந்தன. இதையடுத்து, இன்று காலை 9.30 மணிக்கு பிளஸ் 2 தேர்வு
முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.3
சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் தமிழகத்தில் மாணவர்களை
விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவிகள் 93.64 சதவிகித தேர்ச்சியும், மாணவர்கள் 88.57 சதவிகித தேர்ச்சியும் பெற்றுள்ளனர். இது மாணவர்களை விட 5.07 சதவிகித மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதே நேரத்தில் தேர்வு முடிவுகள் அனைத்து பள்ளிகளிலும் உள்ள கணினிக்கு ஆன்லைன் மூலம் அனுப்பி வைக்கப்படும்.