தேர்தல் பயிற்சிக்கு வராத அரசு ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்ய பரிந்துரை...!!

தேர்தல் பயிற்சிக்கு வராத 8 அரசு ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்தது.


 இதுகுறித்து மாவட்டத் தேர்தல் அதிகாரி தி.அருண் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு புதுவை மக்களவைத் தொகுதி, தட்டாஞ்சாவடி சட்டப்பேரவை தொகுதி இடைத் தேர்தல் ஆகியவற்றுக்கு ஏப். 18-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதற்கான ஆயத்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.


 இதற்கான பணிகளில் ஈடுபட உள்ள அரசு ஊழியர்களுக்கு முதல் கட்டப் பயிற்சி அளிக்கப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஊழியர்களுக்கு கடந்த 23-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை 4 நாள்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.


 இந்த நிலையில், தகுந்த காரணமில்லாமல் முதல் கட்டப் பயிற்சி வகுப்பில் பங்கு பெறாத 92 அலுவலர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன்படி, 84 அலுவலர்களிடம் இருந்து விளக்கம் பெறப்பட்டது.


 நோட்டீஸ் பெற்றும் எந்த விளக்கமும் அளிக்காத 8 அலுவலர்களை பணியிடை நீக்கம் செய்யவும், அந்த அலுவலர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கவும் அந்தந்தத் துறைத் தலைவர்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Share this

1 Response to " தேர்தல் பயிற்சிக்கு வராத அரசு ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்ய பரிந்துரை...!!"

  1. பல மேல்நிலைப் பள்ளிகளில் பல ஆசிரியர் களுக்கு தேர்தல் பணி, தேர்வு பணி எதுவும் வருவது இல்லை? ஏன்?

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...