வாக்களிப்பின்போது பயன்படுத்தப்படும் ஆவணமான வாக்காளர் அடையாள அட்டையை
தமிழக அரசின் இணைய சேவை மையங்களில் பெற்றுக் கொள்ளலாம் என்று தேர்தல்
ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர்களைச்
சேர்த்தவர்கள் மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் இருந்து இலவசமாக
அட்டைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், வாக்காளர் அடையாள அட்டையைத் தொலைத்தவர்களும், புதிதாக
புகைப்படத்துடன் கூடிய வண்ண வாக்காளர் அடையாள அட்டையைப் பெற விரும்புவோரும்
தமிழக அரசின் இணைய சேவை மையங்களில் இருந்து ரூ.25 கட்டணம் செலுத்தி
பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் சேவை மையங்கள் இயங்கக் கூடிய
இடங்கள் குறித்த விவரங்களும் தேர்தல் துறை (www.elections.tn.gov.in)
இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...