வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அடுத்த கோக்கலூர் ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பொங்கல் வாழ்த்து அஞ்சல் அட்டையில் படம் வரைந்து வேறு அரசு பள்ளிகளுக்கு மாணவர்கள் அனுப்பி பரிசு பெற்றுள்ளனர்.
இந்நிகழ்ச்சி தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளுக்கு இடையே மகிழ்வித்து மகிழ் சென்னை சிறுதுளி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மறைந்த ஆசிரியர். ஜெயா வெங்கட் நினைவாகவும், தஞ்சாவூர் கனவு மெய்ப்பட வேண்டும் குழுவின் ஒருங்கிணைப்பாளர்களான குழந்தைசாமி, சிவகுருநாதன், தரணிபாய், ஆனந்த் ஆகியோர் ஏற்பாடுகளையும்,நமது முடிவுகளை இரவு பகலும் கண் விழித்து சேகரித்து உதவிய அன்புத்தம்பி கனவு பள்ளி பிரதீப் ஆகியோர் இடைவிடாது ஏற்பாடுகளை
செய்து அரசு பள்ளிகளுக்கு இடையே அஞ்சல் துறை அஞ்சல் அட்டையை மூலம் அரசு பள்ளிகளுக்கு இடையே வாழ்த்து அட்டைகளை பரிமாறிக் கொள்ளச் செய்தனர். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுவதும் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அஞ்சல் அட்டையில் படம் வரைந்து இதர பள்ளிகளுக்கு அனுப்பி இருந்தனர்.
இதில் கோக்கலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற போட்டியில் பள்ளி அளவில் ஐந்தாம் வகுப்பு மாணவன் அஜய் முதல் பரிசையும், ஐந்தாம் வகுப்பு மாணவி ஆஷிகா இரண்டாம் பரிசும், நான்காம் வகுப்பு மாணவன் கிரண்குமார் மூன்றாம் பரிசும் பெற்றனர். சென்னை சிறு துளி மற்றும் கனவு மெய்ப்பட வேண்டும் குழு சார்பாக அனுப்பி வைக்கப்பட்ட சான்றிதழ்,பரிசு மற்றும் பதக்கத்தினை மாணவர்களுக்கு வழிபாட்டு கூட்டத்தில் வழங்கப்பட்டது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...