தேர்தல் பயிற்சி மையங்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சிரமமின்றி
எளிதில் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என தமிழ்நாடு
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அந்தக் கூட்டமைப்பின் நிறுவன தலைவர் சா.அருணன் புதன்கிழமை
வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல்
மற்றும் சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை ஒட்டி, அரசு
ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு மையங்களில் பயிற்சி
வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
பல மையங்களில் அடிப்படை வசதிகள் சரிவர செய்யப்படவில்லை. மேலும், தபால்
வாக்குகள் செலுத்துவதற்குத் தேவையான வசதிகளை மைய தேர்தல் அலுவலர்கள் செய்து
தரவில்லை. குறிப்பாக இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளுக்கான தபால்
வாக்குகளை பெற்றுத்தரவில்லை. அடுத்த பயிற்சி வகுப்பில் தரப்படும் என்று
அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அடுத்த
பயிற்சி வகுப்பில் குளறுபடிகள் ஏற்படாத வகையில் பயிற்சி மைய அலுவலர்கள்
பார்த்துக் கொள்ள வேண்டும். 100 சதவீதம் தபால் வாக்குகளைச் செலுத்தும்
வகையில் தேர்தல் அதிகாரிகள், அந்தந்த மையங்களில் அதற்கான ஏற்பாடு செய்ய
வேண்டும்.
மேலும் தேர்தல் பணி செய்யும் ஆசிரியைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை மனதில்
கொண்டு, அவர்கள் வசிக்கும் தொகுதிகளுக்கு அருகில் உள்ள சட்டப் பேரவைத்
தொகுதியில் தேர்தல் பணி புரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அதில்
கூறியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...