கோடை விடுமுறையை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த வேண்டுமென்று மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுரை வழங்கியுள்ளது.
கோடை விடுமுறை நாள்களில் மாணவர்கள் தினமும் நாளிதழ்களை படிக்க வேண்டும்
என்றும், அரசு பொது நூலகத்திற்கு சென்று புத்தகங்களை படித்து குறிப்பு
எடுக்க வேண்டும் என்றும் கல்வித்துறை தமது அறிவுரையில் தெரிவித்துள்ளது.
வெப்பம் அதிகமாக இருப்பதால் பெற்றோர் துணையின்றி வெளியே செல்லக்கூடாது
என்று அறிவுறுத்தியுள்ளது. நீர் நிலைகளுக்கு பெற்றோர் துணையின்றி
செல்லக்கூடாது என்றும், இருசக்கர வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என
கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், காலை மாலை வேளையில் விளையாட்டில் ஈடுபட வேண்டும்.
செல்லிடப்பேசியில் நீண்ட நேரம் பேசுவதை தவிர்த்து ஆக்கப்பூர்வமாக கோடை
விடுமுறையைப் பயன்படுத்த வேண்டும், தனித்திறன் வளர்ப்பு பயிற்சியில் ஈடுபட
வேண்டும் உட்பட பல அறிவுரைகள் அதில் இடம் பெற்றுள்ளன. ஒன்று முதல் 9-ஆம்
வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு கடந்த ஒன்றாம் தேதி தொடங்கி
புதன்கிழமையுடன் தேர்வுகள் நிறைவடைந்தன. இருப்பினும், பள்ளி வேலை நாள்கள்
வரும் சனிக்கிழமை (ஏப்.13) தேதி வரை நடைபெறும். இந்த நாள்களில் கோடை
விடுமுறை தொடர்பான அறிவுரைகளை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று
பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...