அதற்கு அடுத்தபடியாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 37.60 லட்சம் வாக்காளர்கள்; குறைந்தபட்சமாக, அரியலுார் மாவட்டத்தில், 5.11 லட்சம்வாக்காளர்கள் உள்ளனர்.புதிதாக சேர்க்கப்பட்டுள்ள, 14.10 லட்சம் வாக்காளர்களுக்கு, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டைகள், தயார் செய்யப்பட்டுள்ளன.அவற்றை, வினியோகம் செய்யும் பணி நடந்து வருகிறது; நேற்று முன்தினம் வரை, 2.51 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு, ஒரு வாரத்திற்குள், வழங்கப்படும். 
அதேபோல, வாக்காளர்கள், ஓட்டுச்சாவடிக்கு சென்று, ஓட்டளிப்பதற்கு வசதியாக, அனைவருக்கும், தேர்தல் ஆணையம் சார்பில், 'பூத் சிலிப்' வழங்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.நேற்று முன்தினம் வரை, 19.17 லட்சம் பேருக்கு, பூத் சிலிப்கள் வழங்கப்பட்டுள்ளன.தேர்தலுக்கு, இரண்டு நாட்களுக்கு முன், அனைத்து வாக்காளர்களுக்கும், பூத் சிலிப் வழங்கப்பட்டு விடும். ஆனால், பூத் சிலிப்பை, ஓட்டளிக்கும் ஆவணமாக பயன்படுத்த முடியாது. தமிழகத்தில், வாக்காளர்கள் அனைவருக்கும், புகைப்படத்துடன் கூடிய, வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது.அதை பயன்படுத்தி, அவர்கள் ஓட்டளிக்கலாம். 
இல்லையெனில், தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள, 'ஆதார்' அட்டை உள்ளிட்ட, 11 ஆவணங்களில், ஏதேனும் ஒன்றை காட்டி ஓட்டளிக்கலாம்.சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில், நேற்று முன்தினம் வரை, பூத் சிலிப் வழங்கப்படவில்லை. அங்கும் உடனடியாக, அவற்றை வழங்க, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு உத்தரவிட்டுள்ளார்.