ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 5.9 லட்சம் பட்டதாரிகள் விண் ணப்பித்துள்ளதாக தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி அனைத்து வகை பள்ளிகளிலும் ஆசிரியராக பணியில் சேர ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சிபெற வேண்டும்.

டெட் தேர்வு இரு தாள்களை கொண்டது. இந்த இரு தாள்களும் தலா 150 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப் படும். முதல் தாளில் தேர்ச்சி பெறு பவர்கள் 1 முதல் 5-ம் வகுப்பு வரையும், 2-ம் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் 6 முதல் 8-ம் வகுப்பு வரையும் பாடம் நடத்த தகுதி உடையவர்கள்.
 
அதன்படி தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் டெட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க கடந்த பிப்ரவரி 28-ல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. தொடர்ந்து டெட் தேர்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்தமார்ச் 15-ல் தொடங்கி ஏப்ரல் 12-ம் தேதியுடன் முடிந்தது. ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மொத்தம் 5.9 லட்சம் பேர் விண் ணப்பித்துள்ளனர்.

தேர்வர்களின் விண்ணப்ப விவரங்களை பரி சீலனை செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன. ஏப்ரல் இறுதியில் போட்டித் தேர்வு நடைபெறும் தேதி, காலி பணியிடங்கள் மற்றும் பாடத்திட் டம் குறித்த விவரங்கள் வெளியிடப் படும். ஜூன் மாதம் தேர்வு நடத்த முடிவு செய்துள்ளதாக தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.தேர்வர்களின் விண்ணப்ப விவரங்களை பரிசீலனை செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Recent Comments