Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Top Indian Colleges Rankings: நாட்டின் தலைச்சிறந்த கல்லூரிகள் எவை எவை? ஜனாதிபதி அறிவிப்பு!!


இந்தியாவில் தலைசிறந்த கல்லூரிகள் எவை எவை எனப்படும் தரவரிசைப் பட்டியலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று வெளியிடுகிறார். இதனை www.nirfindia.org என்ற வலைதளத்தில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.

இந்தியாவில் தலைசிறந்த கல்லூரிகள் எவை எவை எனப்படும் தரவரிசைப் பட்டியலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று வெளியிடுகிறார்.

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் – National Institutional Ranking Framework (NIRF) ஒவ்வொரு ஆண்டும் நாட்டில் உள்ள தலைசிறந்த கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. மேற்படிப்பு படிக்க விரும்பும் மாணவ, மாணவிகள் இந்த தரவரிசையின் அடிப்படையில், கல்லூரிகளை தேர்ந்தெடுப்பதற்கு இது உதவிகரமாக இருக்கிறது.

அந்த வகையில், 2019ம் ஆண்டின் தலைச்சிறந்த இன்ஜினியரிங் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று அறிவிக்கிறார். மொத்தம் 9 பிரிவுகளின் கீழ் இந்த தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது. அவை, தலைச்சிறந்த பல்கலைக்கழகங்கள், இன்ஜினியரிங் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகள், மேனஜ்மென்ட் பாடசாலைகள், பார்மஸி, மெடிக்கல், கட்டிடக்கலை, சட்டக்கல்லூரி, ஓவர் ஆல் என மொத்தம் 9 தரவரிசைப்பட்டியல் உள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு வெளியிடப்பட்ட 100 கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலில், முதல் 10 இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 4 கல்லூரிகள் இடம் பெற்றது. இதே போல், சிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் 4 வது இடத்தில் சென்னை அண்ணா பல்கலைக்கழகமும், 13 வது இடத்தில் கோயமுத்தூர் பாரதியார் பல்கலைக்கழகமும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த தரவரிசைப் பட்டியலை www.nirfindia.org என்ற மனிதவள மேம்பாட்டுத் துறையின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive