பட்டப்படிப்பில் 45 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் மட்டுமே இனி டெட் தேர்வை எழுத முடியும் என்ற ஆசிரியர் தேர்வாணைய அறிவிப்பால் பல்லாயிரக்கணக்கான வேலையில்லா ஆசிரியர்கள் பரிதவிப்புக்கு  ஆளாகியுள்ளனர்.

கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு (டெட்) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடந்த 2012ல் தொடங்கி இதுவரை நான்கு முறை டெட் தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த தேர்வுகளில் பி.எட்  தேர்ச்சி பெற்றிருந்தாலே டெட் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தது.

 இதற்காக இளங்கலைப்பட்டம் மற்றும் பி.எட் பட்டப்படிப்புகளில் குறைந்தபட்ச மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்படவில்லை. இந்நிலையில், 2019 டெட் தேர்வுக்கான அறிவிப்பு ஆசிரியர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டு ஆன்லைன் வழியாக விண்ணப்பங்கள் பதிவு நடந்து வருகிறது. ஆனால், இந்த முறை டெட் தேர்வில் 2ம் தாளுக்கு விண்ணப்பிக்க  இளங்கலைப்பட்டப்படிப்பில் இதர பிரிவினர் 50 சதவீதமும், இதர பிசி, எம்பிசி, எஸ்சி.,எஸ்டி என இடஒதுக்கீட்டுப்பிரிவினர்கள் அனைவரும் 45 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம்  விதிமுறைகளை வகுத்துள்ளது.

இந்த புதிய விதிமுறையால் இந்த ஆண்டு டெட் தேர்வு எழுத காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இது சமூக நீதிக்கும், அடிப்படை உரிமைக்கும் எதிரானது. ஆசிரியர் தேர்வாணைய  முடிவின் மூலம் பி.எட் பட்டப்படிப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

மேலும் 43 முதல் 44 சதவீதம் வரை இளங்கலைப்பட்டப்படிப்பில் மதிப்பெண் பெற்ற பிசி, எம்பிசி மாணவர்களும், 40 முதல் 44 சதவீதம் வரை பெற்ற எஸ்சி., எஸ்டி பிரிவு மாணவர்களும் டெட் தேர்வு எழுத முடியாத நிலைக்கு  தள்ளப்பட்டுள்ளனர். எனவே, இம்முடிவை ஆசிரியர் தேர்வாணையம் திரும்ப பெற வேண்டும் என்று ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Recent Comments