++ பெண் குழந்தைகள் கல்விக்கு பாரத ஸ்டேட் வங்கி ரூ.10 கோடி நன்கொடை: ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::

Subam Matrimony

சுபம் - இலவச திருமண தகவல் மையம்

https://www.subammatrimony.com/

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official

சென்னை: பெண் குழந்தைகளை பாதுகாப்போம், கற்பிப்போம் என்ற முன்முயற்சிக்கு, தனது கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு நோக்கத்தை நிறைவேற்ற எஸ்பிஐ வங்கி முயற்சித்துள்ளது. அதன்படி, ஒரு வருட கல்வியை உள்ளடக்கும் விதமாக போர் வீரர்கள், முன்னாள் படைவீரர்கள், போர் விதவைகளின் பெண் குழந்தைகள் 8,333 பேருக்கு வங்கி சார்பில் ஒவ்வொரு மாதமும் ரூ.1000 மானியம் வழங்கப்படுகிறது. இதற்காக, எஸ்பிஐ வங்கி ரூ.10 கோடி நன்கொடை வழங்கியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7ம் தேதி கொண்டாடப்படும் ஆயுதப்படைகளின் கொடி தின நிகழ்வில், பெண் குழந்தைகளுக்கு கல்வி வழங்குவதற்காக இந்த நிதியை பயன்படுத்தும் வகையில், கேந்திரிய சைனிக் வாரியத்துடன் (கே.எஸ்.பி) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இதுகுறித்து, எஸ்பிஐ தலைவர் தினேஷ் காரா கூறுகையில், “பெண் குழந்தைகளுக்கு சமமான வாய்ப்பை வழங்குவதற்காக, அரசின் முன்முயற்சியை ஊக்குவிப்பதை நாங்கள் நோக்கமாக கொண்டுள்ளோம். கே.எஸ்.பியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டு, பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், கற்பிப்போம் முன்முயற்சிக்கு ஆதரவு தருவதன் மூலம் நாங்கள் எங்களது பங்களிப்பைச் செய்கிறோம். போர் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்வை மாற்றுவதில், எங்களது இந்த முயற்சி உதவியாக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம்” என்றார்.

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...