இக்னோ எனப்படும் இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் டிச.15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் இளநிலை, முதுநிலை, பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகள் தொலைதூரக் கல்வி முறையில் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சான்றிதழ் படிப்புகள் மற்றும் செமஸ்டர் தேர்வு அடிப்படையிலான படிப்புகள் தவிர்த்து ஏனைய அனைத்துப் படிப்புகளுக்கும் ஜூலை 2020 பருவத்துக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது.
இதில், விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி டிச.15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தொலைதூரப் படிப்புகளில் சேர விரும்புவோர் https://ignouadmission.samarth.edu.in/ என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
இதில் ஏதேனும் ஒரு படிப்புக்கு மட்டும் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு சேர்க்கைக் கட்டணம் ரத்து செய்யப்படும் என்று இக்னோ அறிவித்துள்ளது. மாணவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட படிப்புகளுக்கு விண்ணப்பித்தால் கட்டணம் ரத்து செய்யப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களை, சென்னை, வேப்பேரி, பெரியார் திடலில் அமைந்துள்ள இக்னோ பல்கலைக்கழக மண்டல அலுவலகத்தை அணுகலாம். மேலும், 044-26618438, 26618039 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடர்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...