கரோனா தொற்றுநோயால் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளதையடுத்து, எம்.ஃபில். மற்றும் பிஹெச்.டி. மாணவர்களுக்கு ஆய்வறிக்கை சமர்ப்பிக்க பல்கலைக்கழக மானியக்குழு(யுஜிசி) ஆறு மாத காலம் அவகாசம் வழங்கியுள்ளது.முன்னதாக மாணவர்களுக்கு டிசம்பர் 31 வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது, ஆனால் பிஹெச்.டி. மற்றும் எம்.ஃபில். பயிலும் காலம் 5 ஆண்டுகளாகவே கணக்கில்கொள்ளப்படும். தொற்றுநோய் காரணமாக பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்கள் தங்கள் ஆராய்ச்சிகளை செய்ய முடியவில்லை, குறிப்பாக நூலகங்களை பயன்படுத்த முடியவில்லை என்று மாணவர்கள் கூறியதால் கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக யுஜிசி செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின் தெரிவித்தார்.பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களை மீண்டும் திறப்பது குறித்து முடிவு எடுக்குமாறு யுஜிசி மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official

0 Comments:
Post a comment
Dear Reader,
Enter Your Comments Here...