தமிழகத்தில், அரசு, அதன் உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு கியூ ஆர் கோடு வசதியுடன் ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளன. அதேபோன்று, ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளருக்கு, 'ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என தமிழகஅரசு அறித்தது.
இதற்காக, எமிஸ் என்ற இணையதளம் மூலம், பெயர், முகவரி, ரத்த வகை, புகைப்படம் உள்ளிட்டவை சேகரிக்கப்பட்டன. முதல்கட்டமாக, ஸ்மார்ட் கார்டு தயாரிக்கப்பட்டு, ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் சேலம் மாவட்டத்தில், அரசு, அதன் உதவி பெறும் ஆசிரியர், ஆசிரியல்லா பணியாளர் என, 24 ஆயிரம் பேருக்கு ஸ்மார்ட் வழங்கப்பட உள்ளது. தற்போது முதல்கட்டமாக, 12 ஆயிரத்து , 901 கார்டுகள் தயார் நிலையில் உள்ளது. அதனை மாவட்ட கல்வி அலுவலகங்கள் மூலம், அந்தந்த தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.
பள்ளி திறக்கும் போது, ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் பணிக்கு வரும்போது, ஸ்மார்ட் கார்ட்டை கட்டாயம் அணிந்து வரவேண்டும் உத்தரவிட்டப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...