மற்ற சேமிப்புத் திட்டங்களை விட பிஎஃப் சேமிப்பில் உங்களுக்கு அதிக வட்டி வருவாய் கிடைக்கிறது. அவசரப் பணத் தேவைக்கும் எதிர்காலத் தேவைகளுக்கும் பிஎஃப் சேமிப்புப் பணம் மிகவும் உதவியாக இருக்கிறது. வாங்கும் சம்பளத்தில் அடிப்படை சம்பளம் மற்றும் ஊக்கத்தொகையில் 12 சதவீதத்தை பிஎஃப் உறுப்பினர்கள் தங்களது பிஎஃப் கணக்கில் சேமிக்க வேண்டும். ஈபிஎஃப் அமைப்புடன் பதிவு செய்துள்ள நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மட்டுமே பிஎஃப் சேமிப்பில் முதலீடு செய்ய முடியும். இந்நிலையில், இபிஎஃப்ஓ நிறுவனத்துக்கு இடிஎஃப் முதலீட்டில் நல்ல வருமானம் கிடைத்துள்ளதால் பிஎஃப் வட்டியை முழுவதுமாக ஒரே தவணையில் வழங்க முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளது. இதற்கான ஒப்புதலை நிதி அமைச்சகத்திடம் பணியாளர் துறை கோரியுள்ளது. இடிஎஃப் என்பது பங்குச் சந்தையில் பங்கு வர்த்தகம் போலவே செய்யப்படும் ஒன்றாகும். இதில் இபிஎஃப்ஓ செய்திருந்த முதலீட்டில் சிறப்பான வருமானம் கிடைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பிஎஃப்தாரர்களுக்கான நடப்பு நிதி ஆண்டுக்கான வட்டி கரோனா நெருக்கடி காரணமாக எந்த மாற்றங்களுக்கும் உட்படுத்தாமல் 8.5 சதவீதமாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 8.15 சதவீத வட்டியை கடன் திட்டங்களில் இருந்து ஈட்டிய வருமானத்தில் இருந்தும் 0.35 சதவீத வட்டியை பிஎஃப் முதலீட்டில் கிடைத்த வருமானத்தில் இருந்தும் வழங்கவுள்ளதாக கூறியுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...