தமிழக ரேஷன் கடைகளில், அரிசி, கோதுமை இலவசமாகவும்; சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் குறைந்த விலையிலும் வழங்கப்படுகின்றன. அவற்றை, ரேஷன் கார்டு தாரர்கள், தங்கள் முகவரிக்கு ஒதுக்கப்பட்ட கடையில் மட்டுமே வாங்க முடியும்.முகவரி மாறி சென்றால், அந்த விபரத்தை, உணவு வழங்கல் துறை அதிகாரிகளிடம் தெரிவித்தால், புதிய முகவரிக்கு உட்பட்ட கடையில், பொருட்கள் வாங்க அனுமதி வழங்குவர்
.முன்னுரிமை
நாடு முழுதும், எந்த மாநிலத்தவரும், எந்த மாநிலத்தில் உள்ள, ரேஷன் கடையிலும், பொருட்கள் வாங்கி கொள்ளும், 'ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு' திட்டம், தமிழகத்தில், அக்., 1ல் செயல்படுத்தப் பட்டது.
அத்திட்டத்துடன், தமிழக கார்டுதாரர்கள், தமிழகத்திற்குள், எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள்வாங்கும் திட்டமும் துவக்கப்பட்டது. இருப்பினும், கார்டு தாரர்கள், தாங்கள் வசிக்கும் வார்டு அல்லது கிராமத்தில் உள்ள கடைகளில் மட்டும், பொருட்கள் வாங்க முடியாது
.ஏனெனில், ஒரு கிராமத்தில், மூன்று ரேஷன் கடைகள் இருக்கிறது என்றால், கார்டுதாரர், விரும்பிய கடைக்கு முன்னுரிமை தருவர். இதனால், கடை ஊழியர்களிடம் பிரச்னை ஏற்படும். அதை தவிர்க்கவே, வார்டு அல்லது கிராமத்தில் உள்ள கடைகளில் மட்டும் வாங்க முடியாது.
ஒரே ரேஷன் திட்டத்தின் கீழ், கார்டுதாரரின் கைரேகையை பதிவு செய்து, பொருட்கள் வழங்கப்பட்டன. தொழில்நுட்ப பிரச்னையால், கைரேகையை பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டதால், கைரேகை பதிவு, அக்., இறுதியில் நிறுத்தப்பட்டது.
அதற்கு பதில், ரேஷன் கார்டை, 'ஸ்கேன்' செய்து பொருட்கள் வழங்கப்பட்டன. அதன் வாயிலாக, எந்த கடையிலும், பொருட்கள் வாங்கும் வசதிகள் இருந்த நிலையிலும், அத்திட்டமும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது
.தொழில்நுட்ப பிரச்னை சரி செய்யப்பட்டதை அடுத்து, இம்மாதம், 17ம் தேதி முதல், கைரேகையை பதிவு செய்து, பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதையடுத்து, தற்போது, எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்கும் திட்டமும், மீண்டும் அமலுக்கு வந்துள்ளது.
Vote list il name I other district ilum pathivu seiya mudiumaa. Ration card rukum district il madumtaan name I vote list il peyar serkamudiumma
ReplyDelete