கடந்த சில ஆண்டுகளாக வாக்காளர் அட்டைக்கு புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு வண்ண வாக்காளர் அட்டை வழங்கப்படுகிறது. ஆனால் பல ஆண்டுகளுக்கு முன் விண்ணப்பித்தவர்களுக்கு புகைப்பட வாக்காளர் அட்டை தான் வழங்கப்பட்டது. இந்த புதிய வண்ண வாக்காளர் அட்டையை எப்படி பெறுவது? அதற்கு தேவையான ஆவணங்கள் என்னவென்பதை இந்த செய்தித் தொகுப்பில் பார்ப்போம்.
முந்தைய காலகட்டத்தில் வாக்காளர் அட்டையில் திருத்தம் மேற்கொள்ள வேண்டி இருந்தாலும், புதிதாக விண்ணப்பிக்க வேண்டியிருந்தாலும் அதற்கு பல நாட்கள் ஆகும். ஆனால், தற்போது அந்த நிலை மாறி அனைத்தையும் எளிதாக செய்துக் கொள்ள வேண்டிய அளவிற்கு தொழில்நுட்பங்கள் வந்து விட்டது. அதாவது, பெயர், முகவரி உள்ளிட்ட அனைத்தையும் ஆன்லைனிலேயே திருத்திக் கொள்ளலாம்.
இந்திய தேர்தல் ஆணையம் தற்போது புதிய அமைப்புடன் வெளியிடும் வண்ண வாக்காளர் அட்டையை பெற விரும்பும் பழைய வாக்காளர் அட்டையை வைத்திருப்போர், ரூ.30 செலுத்தி NSVP யின் வலைத்தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். புதிதாக விண்ணப்பிப்பவர்கள் NSVP யின் வலைத்தளத்தில் புதிதாக விண்ணப்பிக்கும் பட்டனை கிளிக் செய்து அனைத்து விவரங்களையும் நிரப்ப வேண்டும். படிவங்கள் அனைத்தையும் விண்ணப்பித்து அப்ளை செய்த பிறகு 40-60 நாட்களுக்குள் வண்ண வாக்காளர் அட்டையை பெறலாம். இதற்கு வயது சான்றிதழ், தற்போதைய புகைப்படம், முகவரி ஆதாரம் உள்ளிட்டவை தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...