வாட்ஸ்அப் செயலியில் ஷாப்பிங் செய்ய புது வசதி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலியை பயன்படுத்துவோருக்கு புதிய அம்சம் சேர்க்கப்பட்டு உள்ளது. இது ஷாப்பிங் அனுபவத்தை மேலும் எளிமையாக்குகிறது. கொரோனா தொற்று காலக்கட்டத்தில் டிஜிட்டல் சேவைகள் பல்வேறு துறைகளிலும் பெரும்பான்மையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலியில் புதிதாக கார்ட்ஸ் எனும் அம்சம் சேர்க்கப்பட்டு உள்ளது. இந்த அம்சத்தில் பயனர்கள் பல்வேறு பொருட்களை ஒரே சமயத்தில் ஒற்றை மெசேஜ் மூலம் ஆர்டர் செய்ய முடியும். இதன் மூலம் வியாபாரம் செய்வோர் ஆர்டர் விவரங்களை சரியாக கண்காணிக்க முடியும்.
`ஆடை விற்பனையகம், உணவகம் போன்ற வியாபாரங்களுக்கு புதிய கார்ட்ஸ் அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்' என வாட்ஸ்அப் வெளியிட்டு இருக்கும் செய்தி குறிப்பில் தெரிவித்து இருக்கிறது. புதிய கார்ட்ஸ் அம்சத்திற்கான அப்டேட் வழங்கப்பட்டு வருகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...